டெஹ்ரான்: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் 2,500 கண்டெய்னர்களுடன் பயணித்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கண்டெய்னரில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய பாட்டில்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
தற்போது உலகிலேயே மிகவும் ஆபத்தான இடம் என்னவென்று கேட்டால் பலரும் ஹார்முஸ் ஜலசந்தி என்பார்கள். இங்கு பயணிக்கும் ஒவ்வொரு கப்பல்களும் பத்திரமாக திரும்பி வரும் என்பதற்கு யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்தமானது. தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவுடனான போரால் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்பட ஏராளமான நாடுகளுக்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கியாஸ் செல் வேண்டும். தற்போது அதனை தடுத்து நிறுத்தும் வகையில் தான் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியின் மெயின் வழிப்பாதையை உன்னிப்பாக ஈரானின் ஐஆர்ஜிசி படையினர் கவனித்து வருகின்றனர். அனுமதியின்றி பயணிக்கும் கப்பல்களை இரக்கமே இன்றி ஏவுகணை கொண்டு வருகின்றனர். அதேபோல் அங்குள்ள மாற்று வழிப்பாதையில் ஆங்காங்கே கடல் கண்ணிவெடிகளை வைத்துள்ளன. இதனால் உலகிலேயே ஆபத்து நிறைந்த இடமாக மாறி உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. ஆனால் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் கடலில் கண்டெய்னர்கள் மூழ்கி கிடப்பதோடு, கடல் தண்ணீரில் வாசனை திரவியங்கள், ஐபோன்கள் உள்ளிட்டவை மிதக்கின்றன. அதனை பொதுமக்கள் சிறிய கப்பல்களில் சென்று மொத்தம் மொத்தமாக அள்ளி செல்கின்றனர். இந்த வீடியோ ஹார்முஸ் ஜலசந்தியில் தான் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. போர் பதற்றம் நிறைந்த கடல் பகுதியில் எப்படி ஐபோன்கள், வாசனை திரவியங்கள் மிதக்கின்றன? என்று பார்த்தபோது தான் அதன் பின்னணி குறித்த விவரம் வெளியானது. ஐக்கிய அரபு அமீரகத்தி்ல் இருந்து நேற்று சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் சென்ற ஜிஎஃப்எஸ் பிரைட் என்ற பெயர் கொண்ட கண்டெய்னர் கப்பல் பயணித்தது. இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானால் தடை செய்யப்பட்ட கடல்வழி பாதையில் பயணித்தபோது கண்ணிவெடி வெடித்ததில் கப்பல் தீப்பிடித்ததோடு, கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் ஆங்காங்கே மிதப்பதோடு, அதில் இருந்து ஐபோன்கள், வாசனை திரவியங்கள் உள்பட பிற சரக்குகள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்த மக்கள் தான் சிறிய படகில் சென்று அதனை மொத்தம் மொத்தமாக சேகரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.