சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் மீது ரகசிய ராணுவ தாக்குதல்களை நடத்தியதாக கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டில் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்தார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி ஆகியவை அமெரிக்கா-இஸ்ரேல் போரில் "ஆக்டிவ் பார்ட்னர்" என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ஈரான் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மீது தலா 3 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் மீண்டும் போர் அச்சம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் உள்ள பராகா அணு மின் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரகம் "dangerous escalation" என்றும் "unacceptable act of aggression" என்றும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் மேற்கு ஆசியாவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மூன்று ஆளில்லா வானூர்திகள் (UAV) அந்நாட்டின் மேற்கு எல்லையைத் தாண்டி உள்ளே நுழைந்தன. நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு டிரோன்களை தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மூன்றாவது டிரோன் அணு மின் நிலையத்தின் உள் எல்லைக்கு வெளியே உள்ள மின் உற்பத்தி இயந்திரத்தைத் தாக்கியது. இந்தத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு ஒழுங்குமுறை ஆணையம் (FANR) மற்றும் அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவம் அணு மின் நிலையத்தின் கதிரியக்க பாதுகாப்பு அளவுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அணு உலைகளும் இயல்பாக இயங்கி வருகின்றன. ஒரு அணுஉலைக் மட்டும் சிறிது நேரம் அவசர டீசல் மின் உற்பத்தி இயந்திரங்களின் உதவியுடன் இயங்கியது. இந்தச் சம்பவம் அணு மின் நிலையத்தின் உள் எல்லைக்கு வெளியே நடைபெற்றதால், பெரிய அபாயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டிரோன் தாக்குதல் மூலம் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள காரணத்தால் இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை தடாலடியாக உயர்ந்தது. சர்வதேச பியூச்சர்ஸ் சந்தைசில் ஜூலை ஒப்பந்தம் பிரெண்ட் எண்ணெய் ஒரு பேரல் 2.18 சதவீதம் உயர்ந்து 111.56 டாலராக வர்த்தகம் ஆனது. வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் எண்ணெய்-யின் ஜூன் ஒப்பந்தம் 2.64 சதவீதம் உயர்ந்து 108.20 டாலராக இருந்தது. தற்போது இரண்டும் 2 சதவீதத்தின் கீழ் குறைந்து 110.9 டாலருக்கும், 107.3 டாலருக்கும் வர்த்தகமானது. இதே நாளில் சவுதி அரேபியாவும் ஈரான் ஏவிய மூன்று டிரோன்களைத் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரு சம்பவங்களும் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளன. மேலும் பிரிக்ஸ் கூட்டத்தில் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தச் சம்பவத்துக்கு பிறகு ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் செய்துள்ள பதிவில் டிரம்ப "ஈரானுக்கு நேரம் குறைந்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா உடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது" என்று கூறியுள்ளார். "நேரம் மிகவும் முக்கியம்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த டிரோன் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த பதற்றம் உலக அரசியல் மற்றும் பொருளாதார சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உலக நாடுகள் இந்தச் சம்பவத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.ஐக்கிய அரபு அமீரகம்
டிரோன் தாக்குதல் விவரங்கள்
அணு மின் நிலையம் பாதுகாப்பானது
எண்ணெய் விலை உயர்வு
சவுதி அரேபியா மீது ட்ரோன் தாக்குதல்
டிரம்ப் எச்சரிக்கை