தெஹ்ரான்: ஈரானை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், டிரம்பின் பேச்சை கேலி செய்யும் வகையில், பகவந்த் கேசரி படத்தில் வரும் பாலையா வில்லன் குழுவிடம் சண்டை போடும் ஒரு காட்சியை பகிர்ந்துள்ளது. ஈரான் டிரம்பை கேலி செய்து பதிவிட்ட இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஓய்ந்தபாடில்லை. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. கடந்த சில வாரங்களாக அமெரிக்கா - ஈரான் இடையே நேரடி தாக்குதல் சற்று குறைந்துள்ளது.
எனினும், இரு நாடுகளும் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் வலைத்தளத்தில் நையாண்டியாக ஈரானை கலாய்த்து பதிவிட்டு வருகிறார். இதற்கும் சற்றும் சளைக்காமல் ஈரானும் நையாண்டியாக பதில் அளித்து வருகிறது. இதனிடையே, ஈரானை முற்றிலும் அழித்து விடுவோம் என்று டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், ஈரான் பகவந்த் கேசரி திரைப்படத்தின் நடிகர் பாலையாவின் வீடியோ காட்சியை பகிர்ந்து கலாய்த்துள்ளது. ஜிம்பாவேவுக்கான ஈரான் தூதரகம் பாலையா பட காட்சியின் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:- ஈரானை முற்றிலும் அழித்துவிடுவது குறித்து டிரம்ப் பேசுகிறார். ஆனால், ஈரான் பாதுகாப்பற்ற நாடல்ல என்பது அவருக்குத் தெரியும். சமீபகாலமாக அவர்கள் ஹாலிவுட்டுக்குப் பதிலாக பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து வருகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார். பகவந்த் கேசரி படத்தில் பாலையா வில்லன்களை துப்பாக்கி குண்டுகளை கேடயத்தை வைத்தே சமாளித்துவிட்டு, அவர்களின் துப்பாக்கிகளில் குண்டு காலியான பிறகு, வாயு சிலிண்டரை வைத்தே வில்லன் டீமை துவசம் செய்வார். இந்தக் காட்சியை பகிர்ந்தே ஈரான், டிரம்பை கலாய்த்து இருக்கிறது. ஈரானின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலையா ஈரான் வரை பிரபலமாக இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள். முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நான் மிகப்பெரும் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஈரான் மீண்டும் கட்டமைக்கப்பட்டு, இதற்கு முன் இருந்ததைவிட மிகச் சிறந்த நாடாக, ஒருவேளை மத்திய கிழக்கிலோ அல்லது உலகிலோ மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக உருவாக வழிவகுக்கும் ஒப்பந்தம் ஏற்படுமா? அல்லது ஈரானை முற்றிலும் அழித்து, மக்களையும் நாடுகளையும் கொன்று அழிக்க அவர்களுக்கு ஒருபோதும் வாய்ப்பளிக்காமல் இருப்பதா?" என முடிவு எடுக்க வேண்டியிருப்பதாக கூறினார். இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் அவையில் இன்று உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்தார். ஈரான் ஒருபோதும் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் எங்களை தற்காத்து மட்டுமே நாங்கள் கொள்கிறோம். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. கோழைத்தனமான தாக்குதல் மற்றும் அத்துமீறலால் எங்கள் நாட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். நாங்கள் எங்களை உச்சபட்ச பலத்துடன் தற்காத்துக்கொள்கிறோம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எங்களை தாக்குகிறது" என்றார்.பகவந்த் கேசரி படக் காட்சியை பகிர்ந்து
பாலிவுட் படத்தை பார்க்கிறார்
வாய்ப்பளிக்காமல் இருப்பதா?
ஒருபோதும் அழுத்தத்திற்கு அடிபணியாது