நடுவானில் அலறிய பயணிகள்.. விமான டயர் கழன்று மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் கதறல்.. திக் திக் வீடியோ

  • டெஹ்ரான்: ஈரானில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென்று டயர் கழன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் குலுங்கியதோடு, மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் அலறிய திக்திக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    ஈரானின் வடகிழக்கு பகுதியில் மஷ்ஹத் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் போயிங் 373 ரக விமானம் கெர்மான்ஷா நகருக்கு புறப்பட்டது.

    Advertisement

    விமானத்தில் விமான பணியாளர்கள், பயணிகள் இருந்தனர். மஷ்ஹத் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது.

    விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பைலட் சார்பில் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில் இருந்து மீள்வதற்குள் நிலைமை மோசமானது. விமானத்தில் திடீரென்று அதிர்வு ஏற்பட்டது. விமானம் குலுங்கியது.

    விமானத்தில் இருந்த லக்கேஜ்கள் கீழே விழுந்தன. விமானத்தின் மேற்கூரை சேதமடைந்து கீழே விழுந்தது. இதனால் பயணிகள் பதறிப்போய் அலறினர். மரணபீதியில் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டினர்.

    இதனால் மேற்கொண்டு விமானத்தை இயக்கினால் பிரச்சனை உருவாகும் என்பதை உணர்ந்த பைலட் அதனை தரையிறக்க முடிவு செய்தார். புறப்பட்ட இடமான மஷ்ஹத் விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவெடுத்தார். இதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

    Advertisement

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சில பயணிகள் லேசாக காயமடைந்தனர். அதிர்ஷ்வசமாக பெரிய அளவில் யாரும் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து வேறு விமானத்தில் பயணிகள் மஷ்ஹத் விமான நிலையத்தில் இருந்து கெர்மான்ஷா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் விமான சக்கரத்தில் உள்ள டயர் ஒன்று கழன்றுள்ளது. அதன்பிறகு தான் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதிர்வு உருவானது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி விமானம் தரையிறங்கியபோது மேற்கூரையின் சில பகுதிகள் விமான நிலையத்தில் விழுந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

    English Summary

    A shocking video has emerged showing a terrifying incident on a flight departing from an Iranian airport, where a tire suddenly detached due to a technical malfunction. The plane shook violently, and a section of the ceiling collapsed, causing passengers to scream in panic.