சோனமுத்தா போச்சா.. ரூ.415 கோடி மதிப்பு கொண்ட அமெரிக்க ட்ரோனை காலி செய்த.. குட்டி ஏவுகணை! டிரம்ப் ஷாக்!

  • தெஹ்ரான்: அமெரிக்கா-ஈரான் போரில் டிரம்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த ரூ.415 கோடி மதிப்பு கொண்ட 'MQ-9 ரீப்பர்' ட்ரோனை, வெறும் ரூ.1.25 கோடி மதிப்பு கொண்ட ஏவுகணையை வைத்து ஈரான் வீழ்த்தியிருக்கிறது.

    Advertisement

    உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ட்ரோன்தான் இந்த 'MQ-9 ரீப்பர்'. ட்ரோன் என்றால் வானத்தில் பறக்கும்.. கேமரா இருக்கும்.. இதுதான் நமக்கு தெரிந்தது. ஆனால், இந்த 'MQ-9 ரீப்பர்' பல வித்தைகளை கைவசம் வைத்திருக்கிறது.

    Advertisement

    இதன் எடை சுமாராக 1,700 கிலோ இருக்கும். வானத்தில் பறக்கும் கொலைகார கருவி இது. 'MQ-9 ரீப்பர்' ட்ரோனில் சக்திவாய்ந்த ஹெல்ஃபயர் ஏவுகணைகளை லோட் செய்ய முடியும். இது தவிர லேசர் மூலம் இயக்கும் சிறிய குண்டுகளையும் வைத்து அனுப்ப முடியும். மழை, புயல், வெயில் என எதுவாக இருந்தாலும் சரி, இது தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு வானத்தில் பறக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில் வரை இதனால் பறக்க முடியும். எனவே கீழே இருந்து பார்த்தால் இப்படி ஒரு ட்ரோன் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதே தெரியாது.

    Advertisement

    என்னதான் இவ்வளவு உயர்த்தில் ட்ரோன் பறந்தாலும், இதில் பொறுத்தப்பட்டிருக்கும் அகச்சிவப்பு கேமராக்கள், லேசர் டிசைனேட்டர்கள், அதிநவீன சென்சார்கள் தரையில் இருக்கும் மனிதர்களை துல்லியமாக படம் பிடிக்கும். உலகின் எந்த மூலையில் இந்த ட்ரோன்கள் பறந்துக்கொண்டிருந்தாலும் அதை அமெரிக்காவிலிருந்து வீடியோ கேம் விளையாடுவது மாதிரி எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

    இப்படியான தடாலடி 'MQ-9 ரீப்பர்' ட்ரோன் ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள குஜெஸ்தான் பகுதியில் நேற்று பறந்துக்கொண்டிருந்தது. ஈரான் இதை பார்த்து சும்மா விடுமா?

    ஒரு சிறிய ஏவுகணையை தட்டி விட்டது.. ஏவுகணை நேராக சென்று ட்ரோன் மீது மோதி.. ஒரே நொடியில் அதை உரு தெரியாமல் அழித்துவிட்டது. தரையில் விழுந்த MQ-9 ரீப்பரின் பாகங்களை மீட்டு எடுத்த ஈரான் படைகள், ஆதாரத்தோடு வீடியோவை வெளியிட்டு அமெரிக்காவை வெறுப்பேற்றி வருகிறது.

    Advertisement

    இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்து.. அமெரிக்காவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். என்னய்யா.. நீதான் நாட்டாம கணக்கா பேசின.. இப்போது அவ்வளவு பெரிய காஸ்ட்லி ட்ரோனை, சாதாரண சின்ன ஏவுகணை கிட்ட பலி கொடுத்துட்டு வந்து இருக்க.. என்று டிரம்ப்பை நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர்.

    English Summary

    Iran: Trump continues to face setbacks in the US-Iran conflict. Notably, Iran shot down the US's highly powerful 'MQ-9 Reaper' drone—valued at ₹415 crore—using a missile worth just ₹1.25 crore.