ஈரான் கொடுத்த வார்னிங்.. கன்பியூஸ் ஆன டிரம்ப்..!'மீண்டும் போரா.. பல சர்ப்ரைஸ் காத்திருக்கு' - அப்பாஸ் அராக்சி

  • தெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுகளில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல், பாகிஸ்தான் முயற்சிகளும் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வேளையிலும் மொத்தமாக முட்டுக்கட்டை போடப்பட்டு இருக்கும் நிலையில், வாஷிங்டனில் ஈரான் மீது மீண்டும் போர் துவங்க அமெரிக்கா - இஸ்ரேல் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்தது.

    Advertisement

    இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மீண்டும் போர் தொடங்கினால் "பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள்" நிகழும் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையின் உள்நோக்கம் புரியாமல் கன்பியூஸ் ஆகியுள்ளார் டிரம்ப்.

    Advertisement

    ஈரான் கற்றுக்கொண்ட பாடம்

    ஈரான் தனது ராணுவ திறனை முன்பு நடைபெற்ற போர் தாக்குதலில் இருந்து பெரிய அளவில் கற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த அனுபவம் இனி அடுத்த போர் தாக்குதலின் போது பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    குறிப்பாக, ஏற்கனவே நடந்த போரில் ஈரான் தாக்குதல் மூலம் பல அமெரிக்க விமானங்கள் தாக்கப்பட்டு அமெரிக்க அரசு இழந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அராக்சி, ஈரான் தான் உலகில் முதன் முதலாக அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய நாடு என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

    அமெரிக்க காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ள தகவல் படி, ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா தனது 42 விமானங்களை இழந்துள்ளதாகவும், அதன் மதிப்பு சுமார் 2.6 பில்லியன் டாலர் என்றும் தெரிவித்தார் அப்பாஸ் அராக்சி. இந்த இழப்புகள் ஈரானின் ராணுவத்தின் திறனை உலகுக்கு நிரூபித்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

    Advertisement

    இதேவேளையில் உலகில் சிறந்த விமானம் என்ற பெருமையை கொண்டிருக்கும் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது மூலம் அமெரிக்காவின் பலம் குறைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    ஈரானின் கொடுத்த வார்னிங்-ன் டைமிங் தான் முக்கியமானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என ஈரானுக்கு நேரம் குறித்த வேளையில் அப்பாஸ் அராக்சி இத்தகைய வார்னிங்-ஐ கொடுத்துள்ளார். அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் மீண்டும் பலத்த தாக்குதல் நடத்தப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

    Advertisement

    இதேவேளையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அராக்சி கடந்த மாதம் ரஷ்யா சென்றபோது அதிபர் புதினுடன் சந்தித்தார். அப்போது புதின், "ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காக துணிச்சலுடன் போராடுகிறார்கள். நாங்கள் உங்களுக்கு உதவ எல்லாவற்றையும் செய்வோம்" என்று உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஈரான் தரப்பு, சமீபத்திய போர் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி தங்கள் ராணுவ வலிமையை பெரிதும் அதிகரித்துள்ளதாகவும், மீண்டும் தாக்குதல் நடைபெற்றால் "புதிய முனைகளை" திறந்து புதிய உத்திகளுடன் போரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

    ஈரான் கடந்த ஒரு மாதத்தில் தனது ஏவுகணைத் தளங்களை வலுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய 33 ஏவுகணைத் தளங்களில் 30 இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

    Advertisement

    மேலும் கடந்த 48 மணிநேரத்தில் ஈரானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது 6 டிரோன் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. இது உலக அரங்கில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அமைதிப் பேச்சுகள் வெற்றி பெறுமா அல்லது மீண்டும் போர் மூளுமா என்பது தன் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.

    English Summary

    Iran’s Foreign Minister Abbas Araghchi has issued a strong warning to the US, stating that any return to war will come with major surprises, citing the downing of an F-35 fighter jet and heavy American aircraft losses. The statement comes as Trump gives Tehran a final two-to-three-day ultimatum for peace talks amid escalating regional tensions.