இஸ்ரேலின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.. வாக்குப்பதிவு நிலவரத்தை பார்த்து பெஞ்சமின் நெதன்யாகு ஷாக்

  • ஜெருசலேம்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் போதிய ஆர்வம் காட்டாதது தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உடனடியாக நண்பர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வாக்குச்சாவடிக்கு சென்று தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்த நெருக்கடியான சூழலில், இஸ்ரேலில் இன்று (அக்.27) தேர்தல் நடைபெற்று வருகிறது. காசா போர், பிணைக்கைதிகள் விவகாரம், தற்போது ஈரனுடனான மோதல், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேலில் தேர்தல் நடப்பதால், பிரதமராக இருக்கக் கூடிய பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    நெதன்யாகு ட்வீட்

    தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவான வலதுசாரி ஆதரவு வாக்காளர்கள் வாக்களிப்பது குறைந்து இருப்பது பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து தனது எக்ஸ் பதிவில் பெஞ்சமின் நெதன்யாகுவும் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இஸ்ரேலின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. அரபு சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகிறது. வலதுசாரி ஆதரவாளர்கள் வாக்களிக்கத் தவறினால், அரபு அரசியல் தலைவர்கள் இடம்பெறும் அரசாங்கம் இஸ்ரேலில் அமையக்கூடும். நாம் விழித்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே இருந்துவிடக் கூடாது. வலதுசாரி அணிக்கு ஆதரவாக வாக்களிக்கவும், முடிந்தவரை அதிக வாக்காளர்களை வாக்களிக்கச் செய்யுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

    Advertisement
    கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும்

    யாருக்கு வெற்றி வாய்ப்பு?

    இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் 61 இடங்களை கைப்பற்றும் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளின் படி, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 50 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காடி ஐசன்கோட் மற்றும் நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 56 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

    Advertisement

    பெஞ்சமின் நெதன்யாகுவிடை எதிர்க்கட்சி கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்துகணிப்புகள் கூறியுள்ள நிலையில், வாக்குப்பதிவும் 1977-க்கு பிறகு இந்த ஆண்டுதான் அதிக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    English Summary

    Israel Election: As parliamentary elections are underway in Israel, Benjamin Netanyahu has urged his supporters—noting that their lack of enthusiasm for voting could significantly impact the election results—to immediately reach out to friends and family and encourage them to head to the polling stations to cast their votes for his party.