டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா?

  • வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாக வலியுறுத்தியிருந்த நிலையிலும், இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால், ஈரானில் பல நகரங்களில் வெடிச்சத்தம் கேட்கிறது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே என பல இடங்களில் தொடர் வெடிச்சத்தங்கள் கேட்டன.

    Advertisement

    வடக்கு இஸ்ரேலை குறிவைத்து நேற்று இரவு ஈரான் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

    Advertisement

    பதிலடி வேண்டாம் என சொன்ன டிரம்ப்

    பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்கியதால் கோபம் அடைந்த ஈரான், அந்த நாட்டின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. 10 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கிய நிலையில், அவற்றை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலும் கூறியுள்ளது. ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் சைரன்கள் அலறின. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.

    ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சுவார்த்தை இறுதி வடிவம் எட்டாமல் இருக்கும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார். ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அட்வைஸ் செய்தார்.

    Advertisement

    டிரம்ப் எச்சரிக்கையை மீறி

    ஆனால், டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால், ஈரானில் பல நகரங்களில் வெடிச்சத்தம் கேட்கிறது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே உள்பட பல இடங்களில் தொடர் வெடிச்சத்தங்கள் கேட்டன. மேலும், இஸ்பஹான் மற்றும் தப்ரீஸ் நகரங்களிலும் தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஈரான் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலால், அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் திட்டமிட்டபடி சுமூக முடிவை எட்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    Advertisement

    நெதன்யாகுவை கண்டித்தாரா டிரம்ப்?

    ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் வகையில், லெபனானில் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டிரம்ப் கடுமையாக கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த அறிவுறுத்தல்களை மீறி ஈரான் மீது இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியிருப்பது டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனத்தெரிகிறது.

    English Summary

    Israel launched strikes on Iranian military targets despite US President Donald Trump's request to avoid further escalation. The attacks followed Iran's missile barrage, raising fears of a wider Middle East conflict and putting ongoing US-Iran peace negotiations under fresh pressure.