அணு ஆயுதங்களை மீண்டும் தயாரிக்க முயற்சியா? ஈரானை பகிரங்கமாக மிரட்டிய இஸ்ரேல்! ஓயாத டென்ஷன்

  • ஜெருசலேம்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. 8 மாதங்களுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வரும் நிலையில் போர் இப்போதைக்கு முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் தனது அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிகளை மீண்டும் மேற்கொள்ள திட்டமிடுவதாகவும் புது குண்டை வீசியுள்ளது.

    Advertisement

    ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ள இஸ்ரேல், ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிப்பதாகவும் கூறி பரபரபரப்பை கிளப்பியுள்ளது. இஸ்ரேல் பாதுகப்புத்துறை அமைச்சர் கட்ஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    Advertisement

    இஸ்ரேல் ஒருபோதும் பின்வாங்காது

    ஈரான் விவகாரத்தை பொறுத்தவரை இலக்கு இன்னும் முடியவில்லை. அணு ஆயுதங்களை பெறும் தனது முயற்சிகளை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதர தீவிர நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபட்டு வருகிறது.

    காசா, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களில் இருந்து இஸ்ரேல் ஒருபோதும் பின்வாங்காது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும்போது, அதனுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு முடிவு செய்தால், அந்த அமைப்பு மிகக் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.

    Advertisement
    வரைமுறை இல்லாமல் தாக்குவோம்.. எல்லைகளே கிடையாது! டிரம்ப் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்!

    இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சின் இந்த கருத்து அமைந்துள்ளது. இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும் அந்தகட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டை புதிய அரசு அமைக்க அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைத்துள்ளார்.

    அமெரிக்காவின் அடுத்த கட்ட மூவ் என்ன?

    இதனால் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கட்சின் இந்த கருத்து அமைந்துள்ளது. இஸ்ரேலின் புதிய அரசு பொறுப்பேற்றாலும் இஸ்ரேலின் நிலைப்பாடு பெரிதாக மாறாது என்பதையே இது காட்டுவதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள். நெதன்யாகுவின் அரசியல் தேவைகளுக்காக இஸ்ரேல் ராணுவம் போரில் ஈடுபடுத்தப்படக் கூடாது என முன்னாள் ராணுவ தளபதியான ஐசென்கோட் கடந்த காலங்களில் எச்சரித்து இருந்தார்.

    Advertisement
    வழிக்கு வந்த டிரம்ப்! சீனாவுடன் முக்கிய பேச்சுவார்த்தை! ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்பும் உலகம்!

    அதேவேளையில், அரசின் பெரும்பாலான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவும் அளித்தும் வந்துள்ளார். அமெரிக்காவில் டிரம்பிற்கு இடைக்கால தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த கட்ட மூவ் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில் இருப்பதால் இஸ்ரேல், ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரவில்லை என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    Israel warning Iran: In February, the United States and Israel jointly launched an attack on Iran. With the conflict now stretching beyond eight months, Israel has stated that the war is unlikely to end anytime soon. Furthermore, Israel has dropped a bombshell by claiming that Iran is planning to resume its efforts to develop nuclear weapons.