இஸ்ரேல் பிரதமர் உயிருக்கு ஆபத்து.. அமெரிக்காவில் நடந்த மிக பயங்கரமான சம்பவம்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: உலகின் மிகவும் பாதுகாக்கப்படும் மனிதர்களில் ஒருவராக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கிறார். அவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அங்கு மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி நடந்துள்ளது. ஸ்னைபர் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஆளாகும் வகையில், நெதன்யாகு பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியக் கிழக்கில் நிலவி வரும் மோதல் ஒருவழியாக முடிவுக்கு வருவதைப் போன்ற சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா வெளியிட்ட 20 அம்ச அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. ஹமாஸும் கூட பணயக் கைதிகளை விடுவிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் மோதல் முடியும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா வந்திருந்தபோது தான் இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே நெதன்யாகு நியூயார்க் பயணத்தின்போது இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. நெதன்யாகு எந்தவொரு பாதுகாப்பு அல்லது புல்லட் ஃப்ருப் கண்ணாடி இல்லாமல் ஹோட்டல் ஜன்னல் அருகே அமர்ந்திருக்கும் அவரது போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இப்போது உலகின் மிகவும் பாதுகாக்கப்படும் நபர்களில் ஒருவராக இஸ்ரேல் பிரதமர் இருக்கிறார். பல தீவிரவாத அமைப்புகள் அவரை குறிவைத்து வருகிறது. இதனால் அவருக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், நியூயார்க் நகரில் நெதன்யாகுவுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
போட்டோ
நெதன்யாகு தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரே உள்ள கட்டிடத்திலிருந்து அவரை சிலர் போட்டோ எடுத்துள்ளனர். குண்டு துளைக்காத கண்ணாடிகளோ அல்லது போதிய பாதுகாப்பு அம்சம் எதுவும் இல்லாமல் நெதன்யாகு அங்கு அமர்ந்திருக்கிறார். மிக எளிதாக ஸ்னைபர்களுக்கு இலக்காகும் வகையில் அவர் இருந்துள்ளார். இது அவரது பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.
ஓய்வுபெற்ற இஸ்ரேல் ராணுவ கர்னல் ரோனன் கோஹன், இந்த போட்டோவை தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மேலும், "நியூயார்க் ஹோட்டலில் பிரதமரின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.. அதிபரைப் பார்க்கச் செல்லும் முன்பு, நியூயார்க்கில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரதமர் தனது ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுக்கப்பட்ட போட்டோ.. இந்த போட்டோ ஹோட்டலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் வசிக்கும் ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடுகள்
இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.. குண்டு துளைக்காத ஜன்னல்கள் இல்லை.. பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இந்த இடத்தில் தான் நெதன்யாகு அமர்ந்துள்ளார். பகலாக இருந்தாலும், இரவாக இருந்தாலும் மிக எளிதாக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆயுதத் தாக்குதல்களுக்கு ஆளாகும் வகையில் பாதுகாப்பு இல்லாமல் நெதன்யாகு இருந்துள்ளார். டிரம்ப் ஆதரவாளரான சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டு 3 வாரங்கள் மட்டுமே ஆகிறது. டிரம்பை கொல்லவும் கூட கடந்தாண்டு அங்கு முயற்சி நடந்தது. அப்படியிருக்கும்போது நெதன்யாகு இதுபோல இருந்தது கவலை தருகிறது" என்றார்.
காசா போர்
நியூயார்க்கில் உள்ள லோவ்ஸ் ரீஜென்சி ஹோட்டலில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இஸ்ரேல் பிரதமர் ஜன்னலுக்கு மிக அருகே அமர்ந்திருந்தார். அங்கு எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் காசா மோதல் பல ஆண்டுகளாக தொடரும் நிலையில், அது இப்போது முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சில நாட்கள் அல்லது வாரங்களில் காசா போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications