நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்!

  • டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவரான காடி ஐசென்கோட் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி போராட்டம் வெடித்துள்ளது.

    Advertisement

    இஸ்ரேலில் மொத்தமுள்ள 120 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. ஆட்சியை பிடிக்க 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    Advertisement

    பிரதான கூட்டணிகளான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்களும், 'யாஷர்' கட்சியின் காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு 48 இடங்களும், அரபுகட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன.

    நெதன்யாகுவிற்கு சாதகமாகும் களம்.. இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? 5 விஷயங்கள் நடக்க வாய்ப்பு

    மெஜாரிட்டிக்கான 61 இடங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரேலில் அடுத்த அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரபு கட்சிகள் 'கிங் மேக்கர்' ஆக மாறி உள்ளன. இந்த கட்சிகள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறதோ அந்த கூட்டணியால் எளிதாக ஆட்சியை பிடிக்க முடியும்.

    Advertisement

    ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காடி ஐசென்கோட் ஆகியோர் அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயங்குகின்றனர். இருவரும் அரபு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளனர். இஸ்ரேல் யூத நாடாக உள்ளது. அதோடு அவர்கள் பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள். ஆனால் அரபு கட்சிகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. இதனால் தான் நெதன்யாகு, காடி ஐசென்கோட் ஆகியோர் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே தான் தற்போது இஸ்ரேலில் போராட்டம் வெடித்துள்ளதுது. பெஞ்சமின் நெதன்யாகு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி கட்சியினர் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ளது.

    Advertisement

    இந்த 2 கோரிக்கையை வலியுறுத்தி பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் முன்பு நேற்று ஏராளமானவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் நெதன்யாகுவின் போஸ்டர்களை கிழித்தனர். நெதன்யாகு உடனடியாக அடுத்த ஆட்சிக்கு வழிவிட வேண்டும். பிரதமர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். நிலைமை எல்லை மீறி சென்றதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    நெதன்யாகுவிற்கு வாய்ப்பிருக்கா? 'கிங் மேக்கராக' மாறும் அரபு கட்சிகள்! இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?

    அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவராக இருக்கும் காடி ஐசென்கோட் ஹெர்ஜில்யா நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பும் நேற்று போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து விரட்ட அரபு கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது தற்போது இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Israel Protest: No single party secured a majority in the Israeli parliamentary elections, leading to difficulties in forming a new government. Amidst this situation, protests have erupted, with demonstrators demanding that Prime Minister Benjamin Netanyahu resign from his post, and calling for Gadi Eisenkot—a leader within the opposition alliance—to form a coalition with Arab parties.