அதிகாலையில் குலுங்கிய ஜப்பான்.. 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்.. புல்லட் ரயில்களில் திடீர் மாற்றம்!

  • டோக்கியோ: ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 22 பேர் காயமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சாலைகளில் சிதறின. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இயக்கப்பட்ட ஷிங்கன்சென் புல்லட் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது.

    Advertisement

    ரிங் ஆஃப் பையர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். உலகிலேயே அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருப்பதால் அங்குள்ள கட்டிடங்களும் கூட நிலநடுக்கத்தை சமாளிக்கும் வகையிலேயே கட்டப்பட்டு இருக்கும்.

    Advertisement

    இதற்கிடையே ஜப்பான் நாட்டில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.04 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷிசுவோகா மாகாணத்தின் மேற்கு பகுதியில், சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சாலைகளில் சிதறின. இதில் மொத்தம் 22 பேர் காயமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. குறிப்பாக, ஐச்சி மாகாணத்தில் அதிகபட்ச பாதிப்பு பதிவானது. அங்குள்ள சிட்டா நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுதவிர அண்டை மாகாணங்களான நாகானோ, கிஃபு உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

    Advertisement

    நிலநடுக்கத்தின் காரணமாக கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சாலைகளில் சிதறின. நிலநடுக்கத்தின்போது அனைவரும் ஒரே நேரத்தில் கட்டடங்களில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் மொத்தம் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து ரயில்வே உள்கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் சில ஷிங்கன்சென் புல்லட் ரயில் சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த சில நாட்களில் நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மத்திய ஜப்பானில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    English Summary

    A 5.7 magnitude earthquake struck western Shizuoka in Japan early today, injuring at least 22 people(ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்): Japan Earthquake latest news in tamil.