அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும்! கிம் ஜாங் உன் மரணம்? ஆட்சியைப் பிடித்த தங்கச்சி?

  • பியொங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மூளையில் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்து விட்டதாக வதந்திகள் உலாவுகிறது. இந்த நிலையில் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும், சீனாவின் 900 ராணுவ வீரர்கள் வடகொரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    வடகொரியாவின் சுப்ரீம் லீடர் என அழைக்கப்படும் கிம் ஜாங் உன்னுக்கு திடீரென மூலையில் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    Advertisement

    வட கொரியாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் சீனாவின் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் வடகொரியாவுக்கு வரவழைக்கப்பட்டதாகவும், உன்னின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் அவசர சிகிச்சைக்காக சீனாவின் பெய்ஜிங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன்

    அதே நேரத்தில் கிம் ஜான் உன் உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வமாக வடகொரியா இதுவரை எந்த செய்தியையும் வெளியிடவில்லை. வழக்கமாக கிம் ஜாங் உன் வெளியிடங்களில் தலைகாட்டாவிட்டால் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் கிளப்பப்படுவது வழக்கம்தான். ஆனால் இந்த முறை சீனாவில் இருந்து முக்கிய புள்ளி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டு இருப்பது தான் பரபரப்புக்கு காரணம்.

    Advertisement
    Elon Musk: அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகள்! தாராளம் காட்டிய எலான் மஸ்க்! இவ்வளவா?

    அதாவது சீன ஜனநாயக கட்சியின் தலைவரான வான் வான்ஜுன் ஸீ தனது சமூக வலைதள பக்கத்தில் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது சகோதரி ஆட்சியை கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வட கொரியாவில் நெருக்கடி நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் சீனா 9 ஆயிரம் ராணுவ வீரர்களை பியாங்யாங்கிற்கு அனுப்பியுள்ளதாக கூறியிருக்கிறார்.

    சீனாவில் சிகிச்சை பலனளிக்காமல் கிம் ஜாங் உன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் ரகசியமாக வடகொரியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவரது மரணச் செய்தியை இதுவரை அந்நாடு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றும் வான்ஜுன் ஸீ குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    இதற்கிடையே கிம் ஜாக் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வடகொரியாவின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி விட்டதாகவும், அடுத்த தலைவராக உன்னின் மகள் கிம் ஜூ ஏ வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது சகோதரி அதிகாரத்தை கைப்பற்றி விட்டதாக கூறப்படுவதும் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், எல்லைப் பகுதிகளில் ஒலிப்பெருக்கி ஒலிபரப்புகளை மீண்டும் தொடங்குவது, தாக்குதலை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி தென் கொரியா உடனான எல்லை பதற்றம் குறித்து கிம் யோ ஜாங் கருத்து தெரிவித்ததாக வடகொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டது.

    Advertisement

    ஆனால் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் சீனா 9000 ராணுவ வீரர்களை வடகொரியாவுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படும் தகவலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. வடகொரியாவில் உள்நாட்டு மோதல் வெடிக்கும் அபாயமாக இருப்பதாக கருதி சீனா இதனை செய்திருப்பதாக வான்ஜுன் ஸீ கூறியுள்ளார், அதுமட்டுமல்லாமல் சீனாவின் வடக்கு பிராந்திய ராணுவ பிரிவு உச்சகட்ட அலர்ட்டில் இருப்பதாகவும் ராணுவ வீரர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் வான்ஜுன் ஸீ தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது சமூக வலைதள பதிவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்களை வான்ஜுன் ஸீ கூறி இருக்கிறார். செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சீன அதிபர் வான்ஜுன் ஸீக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் அவசர சிகிச்சைக்காக அவர் பெய்ஜிங் திரும்பியதாகவும் கூறி இருக்கிறார். இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், கிம் ஜாங் உன்னுக்கும், ஜி ஜின்பிங்கிற்கும் ஒரே மாதிரியான உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், தனது பதிவில் வான்ஜுன் ஸீ கூறி இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    Advertisement

    இந்த வதந்திகளுக்கு மத்தியில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று, உள்ளது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி வடகொரியாவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான அருங்காட்சியகத் திறப்பு நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் பங்கேற்றதாகவும், அவருடன் அவரது மனைவி மற்றும் மகள் கிம் ஜூ ஏவும் இருந்ததாகவும் வடகொரிய அரசுச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Unverified claims suggest Kim Jong Un has died and Kim Yo Jong seized power, while reports of Chinese troop deployments remain unconfirmed.