Hafiz Saeed: காஷ்மீருக்கு 10 ஆயிரம் பயங்கரவாதிகளை அனுப்பிய ஹபீஸ் சயித்.. பாகிஸ்தான் மதகுரு வெளியிட்ட பகீர் தகவல்

  • இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கு 10 ஆயிரம் பயங்கரவாதிகளை ஹபீஸ் சயீத் அனுப்பியுள்ளார் என்று பாகிஸ்தானை சேர்ந்த மதகுருவான நசீர் மதானி கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நசீர் மதானி இவ்வாறு பேசியுள்ளார்.

    Advertisement

    இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பல முறை சர்வதேச மன்றங்களில் இந்தியா இதனை அம்பலப்படுத்தியும் பாகிஸ்தான் தனது செயலை நிறுத்துவது இல்லை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் பாகிஸ்தான் கொடுத்து வருகிறது.

    Advertisement

    10 ஆயிரம் பயங்கரவாதிகளை அனுப்பியுள்ளார்

    குறிப்பாக மும்பை பயங்கரவாத தாக்குதல் உள்பட இந்தியாவின் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து நாச வேலைகளில் ஹபீஸ் சயீத் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டு எழுந்து வரும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த மதகுரு ஒருவரே தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக பேசியிருக்கிறார்.

    பாகிஸ்தானை சேர்ந்த மதகுருவான நசீர் மதானி, கடந்த 14 ஆம் தேதி அந்நாட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நசீர் மதானி, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத் பற்றி பெசியுள்ளார். அவர் கூறுகையில், "காஷ்மீருக்கு 10 ஆயிரம் பயங்கரவாதிகளை ஹபீஸ் சயீத் அனுப்பியுள்ளார்' என்றார்.

    Advertisement

    ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு லஷ்கர் இ தொய்பாவின் பங்கு பற்றிய கேள்விகளை மீண்டும் இது எழுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2025 ஆம் ஆண்டு பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்தலுக்கு பின்னணியிலும் பாகிஸ்தானின் சதி இருந்தது அம்பலம் ஆனது. பாகிஸ்தானில் இருந்து இயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஆதரவு அமைப்பான டிஆர்எப் அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருந்தது.

    பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தியது. பயங்கரவாத செயல்களால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகிறது. இருந்தாலும் அந்த நாடு திருந்தவில்லை என்பதும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதையும் நசீம் மதானியின் காட்டுவதாக அமைந்துள்ளது.

    Advertisement

    ஹபீஸ் சயீத் மீதுள்ள வழக்குகள்

    ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது இந்தியாவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஜூலை மாதம் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஹபீஸ் சயீத்திற்கு ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. மும்பை தாக்குதல் தொடர்பாக ஹபீஸ் சயீத்துக்கு எதிராக வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்ரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் மும்பையில் 166 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலில் லஷ்க்ர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஹபீ சயீத் உள்பட 6 பாகிஸ்தானியர்களுக்கு எதிராக விசாரணைக்கு ஆஜராகாத நிலையிலும் வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது.

    English Summary

    Hafiz Saeed Sent 10,000 Terrorists To Kashmir: Pakistani cleric Nasir Madani has stated that Hafiz Saeed has sent 10,000 terrorists to Kashmir. Madani made these remarks at a meeting organized by a banned terrorist group.