மனைவியின் இறுதிச் சடங்கு.. 12 மணி நேர பரோலில் வந்தார் நவாஸ் ஷெரீப்


இஸ்லாமாபாத்: மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பனாமா கேட் ஊழலில் சிக்கி சிறையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அவரது மகள் மரியம் ஷெரீப் மற்றும் அவரது கணவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரது மனைவி பேகம் சூல்சூம் புற்றுநோய் காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்தது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பேகம் சூல்சூமுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ள நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோருக்கு பரோல் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நவாஸ், மகள் மரியம், அவரது கணவர் ஆகியோருக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் ராவல்பிண்டியில் அடைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து லாகூர் வந்தடைந்தனர்.

Have a great day!
Read more...

English Summary

Pakistan’s government release Sharif and his daughter Maryam Nawaz on parole to attend wife's funeral.