100 பேர் இல்லை.. மொத்தம் 300 இந்தியர்கள் மாயம்! நேபாள வெள்ளத்தின் குரூரம்! அதிர்ச்சி தகவல்

  • காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 100 இந்தியர்கள் வரை மாயமாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே பாதிப்பு மோசமாக இருப்பதாக கூறியுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானல், மொத்தம் 300 இந்தியர்கள் மாயமாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    நேபாளத்தில் நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது. இப்படியொரு பாதிப்பு ஏற்படும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதில் சிக்கி 100 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கிடையே இந்த கொடூரமான வெள்ளம் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானல் சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பேரழிவு

    இகு தொடர்பாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒரு சில மணி நேரத்தில் பல நகரங்கள் மொத்தமாக அழிந்து போனது. சமீப காலங்களில் இதுபோன்ற ஒரு பேரழிவு நேபாளத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த பேரழிவில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேரை இன்னும் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் இந்த வெள்ளம் எவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தியது என்பது துல்லியமாக நமக்கு தெரியவில்லை.

    இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளன. மேலும், எத்தனை பேர் மாயமாகியுள்ளனர் என்பதை கண்டறியும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேரழிவின் முழு கொடூரத்தை கணக்கிட்டு வருகிறோம்" என்றார்.

    Advertisement

    300 இந்தியர்கள் மாயம்

    குறைந்தது 300 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவித்த அவர், இவர்களில் பெரும்பாலானவர்கள் மானசரோவர் யாத்திரைக்காக வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும், "வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள், மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் பாதையில் தான் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் 300 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள தீவிரமாக முயன்று வருகிறோம்.. இந்தியர்களை தவிர, பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 500 வெளிநாட்டவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை" என்றார்.

    வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட தூதரகங்களுடன் நேபாள அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. நேபாள மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோமோ, அதே அளவு வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனிலும் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

    Advertisement

    இந்தியாவுக்கு நன்றி

    பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் உடனடி நிவாரண பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அவர் மேலும், "உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளத்துக்கு ஆதரவும் உதவியும் கிடைத்து வருகிறது. இந்தியா உடனடியாக நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக நன்றி. தற்போது எங்களது கவனம் மீட்பு பணிகளில் தான் இருக்கிறது.. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் நேபாளத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்..

    சுற்றுலா

    பேரழிவுக்கு பிறகு நேபாளத்தின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கும். ஓரிரு பகுதிகள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்படவில்லை. முக்கியமான சுற்றுலா தலங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. போக்ரா மற்றும் எவரெஸ்ட் மலை பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாகவே இருக்கிறது. இந்த பேரழிவில் இருந்து நிச்சயம் மீண்டு வருவோம். அப்போதும் உங்கள் உதவி எங்களுக்கு முக்கியம். வரும் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திற்கு வந்து செலவிடும் பணம், நாங்கள் மீண்டு வர உதவியாக இருக்கும்" என்றார்.

    Advertisement

    கடந்த கால பேரழிவுகளில் இருந்து நேபாளம் மீண்டு வந்திருப்பதை சுட்டிக்காட்டிய ஷிஷிர் கானல், தற்போதைய பேரழிவிலிருந்தும் நாடு மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    English Summary

    Nepal Foreign Minister Shishir Khanal has said around 300 Indians may be missing after the devastating floods in Nepal(நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம்): Indians missing in Nepal Flood.