நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம்.. கோஷி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து.. பாதுகாப்பாக மக்கள் இடமாற்றம்

  • காத்மாண்டு: நேபாளத்தின் கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. நுவாகோட், ரசுவா, தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 675ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 300க்கும் மேற்பட்ட இந்தியவர்கள் உட்பட 2,400க்கும் அதிகமானோர் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றனர்.

    Advertisement

    அவர்களின் நிலை குறித்து எந்தவித தகவலும் இல்லை. கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்திருக்கிறது. வீடுகள், பாலங்கள், வாகனங்கள், சாலைகள், நீர்மின் நிலையங்கள் என்றுஇ ஏராளமான கட்டமைப்புகள் அழிந்துவிட்டன. இந்த வெள்ளம் பல்வேறு மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக ப் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் உட்பட பேரிடர் குழு, போலீஸார் என்று சுமார் 11 ஆயிரம் பேர் இந்த பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல் நேபாள ராணுவ மக்கள் தொடர்பு இயக்குநரகம் அறிக்கையின்படி, இதுவரை 163 வெளிநாட்டினர் உட்பட 2,465 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    அதில் 113 இந்தியவர்கள், 26 சீனர்கள், 15 தென்கொரிய நாட்டினர் அடங்குவர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தியர்கள் 300 பேர் உட்பட 2,400 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றனர். நேபாளம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவில் இருந்து மருத்துவர்கள் குழு நேற்று மீட்பு பணிகளில் இணைந்தது.

    இந்த நிலையில் நேபாளத்தில் கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. நுவாகோட், ரசுவா, தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English Summary

    Nepal Flood: Flood Warning Issued in Nepal as Koshi River Swells Again; Residents Evacuated to Safe Zones