நேபாளத்தை வாரி சுருட்டிய வெள்ளம்.. பலி எண்ணிக்கை 157ஆக உயர்வு! நூற்றுக்கணக்கானோரை காணவில்லை!

  • காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று திடீரென காட்டாறு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வெள்ளம் நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் என அனைத்தையும் அடித்து சென்றுவிட்டது. தற்போது வரை 157 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் அந்நாட்டு பேரிடர் மீட்பு படையினர் அறிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 157 உயிரிழந்துள்ளனர். கைலாஷ், மானசரோவர் யாத்திரை சென்ற 133 இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

    Advertisement

    திபெத் எல்லை அருகே ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுதான் இந்த வெள்ளத்திற்கு காரணம். இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வுகளையு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உடைந்து மண் மற்றும் பாறைகளுடன் கலந்த நீர் போட்டோ கோசி ஆற்றில் கலந்து காட்டாறு வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    நேபாளத்தின் ரசுவா, தாதிங் மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. சாலைகள், பாலங்கள் மற்றும் நீர் மின் பிளான்ட்டுகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறது. காணாமால் போன நூற்றுக்கணக்கானவர்களில், இந்தியாவை சேர்ந்த 133 பேரும் அடங்கும். தமிழகத்தை சேர்ந்த 50 சுற்றுலா பயணிகளின் நிலை என்ன என்றும் தெரியவில்லை.

    English Summary

    Nepal's Monsoon Tragedy: A sudden flash flood struck Nepal yesterday, sweeping away everything in its path, including hundreds of homes and bridges. Disaster relief teams have announced that the bodies of 157 people have been recovered so far, while hundreds remain missing.