ஒற்றைக் காலில் நிற்கும் நெதன்யாகு! இஸ்ரேல் தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்! மொத்தமா முடியுது

  • டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிய வந்திருந்தது. அவர் வெற்றிப்பெற அரபு கட்சிகளின் ஆதரவு அவசியம். ஆனால், நெதன்யாகு அரபு கட்சிகளை நாட மறுத்துள்ளார். அப்படியெனில்.. இந்த தேர்தலில் நெதன்யாகு கதை முடிகிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    காசா, பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல்.. ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்தது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என இஸ்ரேல் பார்க்காத வேலையே இல்லை.

    Advertisement

    சொந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு

    இதெல்லாம் உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேலின் இமேஜை டேமேஜ் செய்திருக்கிறது. மறுபுறம் சொந்த நாட்டு மக்களே நெதன்யாகு அரசுக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். போர், போர் என்று சொல்லிக்கொண்டு.. விலைவாசியை ஏத்திவிட்டுட்டீங்க.. வேலை இல்லை, வேலைக்கு ஏத்த சம்பளம் இல்லை, வருமானம் நிலையானதாக இல்லை என நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

    இஸ்ரேல் தேர்தல்

    நிலைமை இப்படி இருக்கையில்தான் தற்போது இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்திருக்கிறது. அந்நாட்டு நாடாளுமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில், வெற்றிப்பெற வேண்டும் எனில், 61 இடங்களை கைப்பற்ற வேண்டும். நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. அதில், நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி வெற்றிப்பெறாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஷாக்கை நெதன்யாகு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உசுர கொடுத்து போர் நடத்தி.. நம்ம ஹீரோவா மாறலாம்னு யோசிச்சா.. மக்கள் கண்டுக்க மாட்டிங்குறாங்களே! என்று அதிர்ச்சியடைந்தார்.

    Advertisement

    அரபு கட்சிகள்தான் ஹீரோ

    இப்போது அவருக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் அரபு கட்சிகளின் ஆதரவை நாடுவதுதான். இத்தனை வருஷமா அரபு நாடுகளையும், கட்சிகளையும் திட்டிதான் நெதன்யாகு அரசியல் செய்திருக்கிறார். இப்போது தேர்தல் என்பதால், அரபு கட்சியுடன் கூட்டணி வைத்தால் எப்படி? அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஒற்றைக்காலில் நின்றிருக்கிறார். இந்த நிலைப்பாடு அவரை தோல்வியடைய வைக்கும். ஏற்கெனவே அவர் மீது ஏகத்துக்கும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒருவேளை தோற்றுவிட்டால்.. மொத்த வாழ்க்கையும் ஜெயிலில்தான் கழிக்க வேண்டி வரும்.

    3 வழிகள்

    எனவே என்ன செய்வது என்று நெதன்யாகு தீவிரமாக யோசித்து வருகிறார். அரபு கட்சிகளின் ஆதரவு இல்லாமலும் அவர் பிரதமராக முடியும். ஆனால் இவர் தனது கொள்ளைகை கொஞ்சம் தளர்த்தி எதிர்க்கட்சியான 'யாஷர்' கட்சியுடன் கூட்டணி வைக்கணும். அதுவும் இல்லையெனில் எதிர்க்கட்சிகளிடமிருந்து எம்பிக்களை தங்கள் வசம் ஈர்க்க வேண்டும். அதுவும் இல்லையெனில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கலனு சொல்லி.. இன்னொரு தேர்தல் வர வரைக்கும் நானே பிரதமரா இருந்துக்குறேன் என.. பிளான் செய்ய வேண்டும்.

    Advertisement

    வாக்கு எண்ணிக்கை நிலவரம்

    இத்தெல்லாம் நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவுதான். அப்படியே நடந்தாலும், மக்களிடம் நெதன்யாகுவின் செல்வாக்கு குறைந்துவிடும். எனவே, நெதன்யாகு என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி, இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    நெதன்யாகுவின் லிகுட் கட்சி கூட்டணி - 50-52 இடங்களில் முன்னணி
    எதிர்க்கட்சியான காடி ஐசன்கோட்டின் கூட்டணி - 49-53 இடங்களில் முன்னணி
    அரபு மற்றும் இதர கட்சிகள் - 15-18 இடங்களில் முன்னணி

    காலை 8:18 நிலவரப்படி, மொத்தம் 33.2% வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவு அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் 77.7% ஆகும்.

    English Summary

    Netanyahu: With the parliamentary elections in Israel generating high anticipation, opinion polls have indicated that Prime Minister Benjamin Netanyahu will not secure a majority. To win, he would need the support of Arab parties; however, Netanyahu has refused to reach out to them. This raises the question: is this the end of the road for Netanyahu in this election?