டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள்

  • பியோங்யாங்: வடகொரியா - தென்கொரியா இடையே மோதல்போக்கு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று தனது எல்லையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பீரங்கிகள், ராணுவ வீரர்களை குவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, நடந்து வரும் மோதலுக்கு நடுவே வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் தென்கொரியாவிற்கு எதிராக போரை தொடங்க உள்ளாரா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    வடகொரியாவும், தென்கொரியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் இருநாடுகள் இடையே கடும் மோதல் உள்ளது. வடகொரியா அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன், தென்கொரியாவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

    Advertisement

    அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி வருகிறார். இதனால் பயந்துபோன தென்கொரியா, அமெரிக்காவிடம் உதவி கேட்டது. தென்கொரியாவில் தற்போது அமெரிக்க படைகள் உள்ளன. தென்கொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    என்னடா நடக்குது இங்க.. நான் வந்துட்டேன்டா! செத்து செத்து விளையாடும் கிம் ஜாங்! கிளப்பி விட்டது யார்?

    கிம் ஜாங் உன் டென்ஷன்

    இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை இன்னும் கோபப்படுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே ஏற்கனவே மோதல் உள்ள நிலையில் தென்கொரியாவின் இந்த செயல் தங்கள் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கிம் ஜாங் உன் நினைக்கிறார். இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தென்கொரியாவை மிரட்டும் வகையில் ஏவுகணைகளை ஏவி வருகிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

    Advertisement

    பீரங்கிகள் குவிப்பு

    இந்நிலையில் தான் தற்போது தென்கொரியா - வடகொரியா இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. டென்ஷனின் உச்சத்திற்கு சென்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திடீரென்று 3 பீரங்கிகளை எல்லையில் குவித்துள்ளார். தென்கொரியா - வடகொரியா எல்லையில் 122 எம்எம் ஹாவிட்சர் பீரங்கிகளை வடகொரியா நிலை நிறுத்தி உள்ளது. இந்த பீரங்கிகளின் முனை தென்கொரியாவை நோக்கி உள்ளது.

    எல்லையில் ராணுவ வீரர்கள்

    அதுமட்டுமின்றி 20 முதல் 30 வடகொரியா ராணுவ வீரர்கள் வழக்கத்திற்கு மாறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தென்கொரியா - வடகொரியா எல்லையில் ராணுவம் இல்லா மண்டலம் (Dimiitariesed Zone) பகுதியில் புதிதாக வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தென்கொரியாவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement
    Kim Jong un: எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க.. சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த கிம் ஜங் உன்! பின்னணி

    கண்ணி வெடி பிரச்சனை தான் காரணம்

    தற்போது அதிகரித்துள்ள இந்த மோதலுக்கு சமீபத்தில் நடந்த கண்ணிவெடி பிரச்சனை தான் முக்கிய காரணம். அதாவது அக்டோபர் 21ம் தேதி தென்கொரியா - வடகொரியா எல்லையில் பாஜு என்ற இடத்தில் ராணுவ நடமாட்டத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் திடீரென்று கண்ணிவெடி வெடித்தது. இதில் தென்கொரியாவின் 3 படை வீரர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக தென்கொரிய ராணுவம் மற்றும் ஐநா விசாரணை மேற்கொண்டது.

    Advertisement

    அப்போது 1953ம் ஆண்டின் கொரிய போரின் அர்மிஸ்டிஸ் ஒப்பந்தத்தை மீறி வடகொரியா படையினர் தான் இந்த கண்ணிவெடிகளை புதைத்து வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியது. இதனை வடகொரியா முற்றிலுமாக மறுத்தது. இந்த செயலை வடகொரியா செய்யவில்லை. வேண்டுமென்றே வடகொரியா மீது பழி சுமர்த்தப்படுகிறது என்று கூறியது.

    அதுமட்டுமின்றி கண்ணிவெடி விவகாரத்தில் வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்கொரியா கோரிக்கை வைத்தது. இது கிம்ஜாங் உன்னை கடும் டென்ஷனாக்கியது. பதிலுக்கு தென்கொரியாவும் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலிக்கு கடிதம் எழுதியது. இது இருநாடுகள் இடையே பிரச்சனையை தீவிரமாக்கிய நிலையில் தென்கொரியாவிற்கு எதிராக வடகொரியா தனது எல்லையில் பீரங்கிகளை குவித்து வருவதோடு, ராணுவ வீரர்களையும் நிலைநிறுத்த தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement
    கணவன் - குழந்தைகளை பார்க்கவே கூடாது! வடகொரியா பெண்களை சீனாவிற்கு அனுப்பும் கிம் ஜாங் உன்.. பின்னணி

    போர் பதற்றம்

    இந்த 2 செயல்கள் வடகொரியா - தென்கொரியா இடையே போர் பதற்றம் போன்ற சூழல் உருவாகி உள்ளது. இதுபற்றி தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள கியுங்னம் பல்கலைக்கழ பேராசிரியர் லிம் யூல் சுல் கூறுகையில், ''வடகொரியா தனது பீரங்கிகளை இப்படி வெளிப்படையாக ஒருபோதும் உலகுக்கு காட்டியது இல்லை. இது மிகவும் வித்தியாசமான செயலாக உள்ளது.

    இதன்மூலம் வடகொரியா ஒரு செயலை உலகுக்கு உணர்த்துகிறது. இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. ராணுவ நடவடிக்கை மூலமாக தான் தனது எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளோம் என்பதை உணர்த்த வடகொரியா இப்படி செய்திருக்கலாம்'' என்றார்.

    English Summary

    North Korea - South Korea Tension: There is an ongoing state of confrontation between North Korea and South Korea. Against this backdrop, North Korean leader Kim Jong Un has suddenly massed artillery and troops along the border, sparking significant tension and raising concerns: amidst the current standoff, is Kim Jong Un preparing to launch a war against South Korea?