டிரம்ப் தோற்ற நேரம்.. சீனுக்குள் வந்த வடகொரியா! நிலைமை மொத்தமாக மாறுதே!

  • பியாங்யாங்: அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்திருக்கும் நிலையில், தற்போது வடகொரிய ராணுவம் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணையை சோதனை செய்திருக்கிறது. டிரம்பின் தோல்வியும், வடகொரியாவின் புதிய சோதனையும் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கின்றன.

    Advertisement

    இந்த புதிய வான் பாதுகாப்பு அமைப்பானது, டார்கெட்டை மனித உதவியின்றி.. ஆட்டோமேட்டிக்காக துல்லியமாக கண்டறிந்து அடையாளம் காணும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

    Advertisement

    சோதனையின் போது ஏவுகணையை இயக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்புகள் அதாவது, கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மிகவும் நம்பகமானவை என்பதும், அதன் செயல்பாடுகள் துல்லியமாக இருந்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பின் மூலம், வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில், இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பது தான் முக்கியமான விஷயமே! தேர்தலிலும், தேர்தல் முடிவுகளிலும் அமெரிக்காவின் முழு கவனம் இருக்கும்போது.. மறுபக்கம் தனது ராணுவ பலத்தை சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று, தேர்தல் சமயத்தில் வடகொரியா இந்த சோதனையை நடத்தி இருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    அதேபோல, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. ஆனால், தேர்தல் தோல்வி இந்த பேச்சுவார்த்தைக்கான அறிகுறியை முற்றிலுமாக இல்லாமல் செய்து விட்டது. இருப்பினும்.. எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் தங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உலகுக்கு தெரியப்படுத்தவே, தேர்தல் சமயத்தில் வடகொரியா இந்த சோதனையை நடத்தி இருக்கிறது.

    இந்த சோதனை நடத்த மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென் கொரிய கூட்டுப் படைகள் Freedom Flag என்கிற பெயரில் வான்வழி கூட்டு ராணுவ பயிற்சிகளை செய்து வருகிறது. எனவே, இதற்கு பதிலடி கொடுக்க.. புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் சேர்த்து, எதிரிகளின் விமான நிலையங்களை தாக்கி அழிக்கும் யுக்திகளையும் வடகொரியா இந்த சோதனையின் மூலம் ஒத்திகை பார்த்துள்ளது. இது அமெரிக்காவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    வட கொரியா தனது சோதனையின் போது, தரை பரப்பிலிருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய ஏவுகணையை சோதனை செய்திருக்கிறது. சர்வதேச அரசியல், ராணுவ வல்லுநர்கள் இது குறித்து கூறும்போது.. வடகொரியா சோதனை செய்த ஏவுகணையின் வழிகாட்டுதல் பகுதி, ரஷ்யாவின் புகழ் பெற்ற S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை போல இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    அதேபோல சுமார் 12 முதல் 13 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை மொத்தமாக தாக்கி அழிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் கொத்து குண்டுகளையும் வடகொரியா இந்த சோதனையில் பயன்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    North Korea: Following Donald Trump's defeat in the U.S. midterm elections, the North Korean military has tested a new air-defense missile. Both Trump's loss and this new test by North Korea have sparked various discussions on the international stage.