எவ்வளவு காலத்துக்கு E20 பெட்ரோலுடன் மல்லு கட்டுறது.. ஹார்முஸ் விவகாரம் முடியுமா? வெளியான அப்டேட்

  • தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையில் பிரச்சனை நீடித்து வருவதால், இந்தியாவில் E20 பெட்ரோல் விநியோகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஹார்முஸ் நீரிணை பஞ்சாயத்து எப்போது முடியும்? என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    Advertisement

    ஹார்முஸ் நீரிணை என்பது இப்போது முழுக்க முழுக்க ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நீரிணை வழியாகத்தான் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20-30% நடக்கிறது. அமெரிக்க கிளப்பிய ஏழரை காரணமாக தற்போது இந்த நீரிணையை லாக் செய்து.. கச்சா எண்ணெய் விநியோக்கத்தை ஈரான் கட்டுப்படுத்தி வருகிறது.

    Advertisement

    இதை இப்படியே விட்டால் சரியாக வராது என்பதால், ஈரானின் பக்கத்து நாடுகள் பேச்சுவார்த்தையில் இறங்கின. குறிப்பாக ஓமன், ஈரானுடன் சீரியஸாக பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஓமன் தெரிவித்துள்ளது.

    இன்று நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன என்றும்.. ஏறத்தாழ ஒப்பந்தம் இறுதியாகும் நிலைக்கு வந்துவிட்டது என்றும் ஓமன் கூறியிருக்கிறது. ஆனாலும், எப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

    Advertisement

    ஈரான் தரப்பிலும், பேச்சுவார்த்தை பாசிட்டிவாக போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இது குறித்து கூறுகையில், "பேச்சுவார்த்தையெல்லாம் ஓகேதான்.. ஆனால் ஹார்முஸ் நீரிணையை திறப்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

    இந்த மேட்டர் ஜவ்வாக இழுத்து வருவதால், நமக்கு போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்கவில்லை. அதனால்தான் நாம் E20 பெட்ரோலை நோக்கி நகர்ந்து வருகிறோம். இப்போதைக்கு ஹார்முஸ் வழியாக புதிய பாதையை உருவாக்க வேண்டும் என்று ஈரானும், ஓமனும் முயற்சித்து வருகின்றன. இந்த பாதைக்கு இந்த இரண்டு நாடுகள்தான் பொறுப்பு என்பதால், இந்த ஐடியா ஒரளவுக்கு ஒர்க்கவுட் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    எப்படியோ நீரிணையை ஓபன் செய்ய வேண்டும்.. இந்தியாவில் E20 பெட்ரோல் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.

    English Summary

    Iran: Amidst the ongoing issues in the Strait of Hormuz, the distribution of E20 petrol has commenced in India. A key update has now emerged, even as many await news on when the situation in the Strait of Hormuz will be resolved.