ஆஸ்திரேலிய அரசின் வெப்சைட்டை ஹேக் செய்த OpenAI.. என்ன செஞ்சு இருக்குனு பாருங்க!

  • சிட்னி: ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. கடைசியில் மனிதனை கடித்த கதையாக AI மாறியிருக்கிறது. ஆஸ்திரேலியா அரசின் வெப்சைட்டை OpenAI-ன் ஏஐ ஏஜென்ட் ஹேக் செய்திருக்கிறது. இதனால், அந்நாட்டு அரசு கடும் அதிருப்தியடைந்திருக்கிறது.

    Advertisement

    ஆஸ்திரேலியா அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தை OpenAI ஹேக் செய்து, ரகசியமாக டேட்டாக்களை திருடியிருக்கிறது. உலக வரலாற்றில் கவர்மென்ட் வெப்சைட்டை, ஏஐ ஹேக் செய்தது இதுவே முதல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    கடந்த ஜூன் 18ம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. OpenAI நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு ஒரு பரிசோதனையை மேற்கொண்டிருந்தது. அப்போது அதன் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய, ஒரு ஏஐ ஏஜென்ட், ஆஸி அரசின் ஜென்ரல் மெடிசன் இன்சூரன்ஸ் திட்டமான Medicare-ன் வெப்சைட்டுக்குள் நுழைய முயன்றது.

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஆஸி. கவர்மென்ட்டின் இன்டெர்நெட் செக்யூரிட்டி, OpenAIக்கு பல முழுறை பெர்மிசன் மறுத்தது. இருந்தாலும், OpenAI ஏஜென்ட் நோ என்கிற பதிலை ஏற்காமல், மாற்று வழிகளை கண்டறிந்து பாதுகாப்பு வளையங்களை உடைத்துக்கொண்டு இணையதளத்தின் பொது பார்வைக்கு இல்லாத ரகசிய பக்கங்களுக்குள் ஊடுருவியது.

    Advertisement

    ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் OpenAI நிறுவனம் அளித்த விளக்கத்தின்படி, பொதுமக்களின் தனிப்பட்ட மருத்துவ குறிப்புகள் அல்லது நோயாளிகளின் விவரங்கள் எதையும் இந்த ஏஐ திருடவில்லை. மருத்துவ செலவினங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான திரட்டப்பட்ட பொதுவான டேட்டா மற்றும் சில ஃபைல்களை மட்டுமே இது ஆக்சிஸ் செய்திருக்கிறது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் பாதுகாப்பு துறையில் இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

    ஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்ற ஆஸி பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த ஹேக்கிங் ஜூன் மாதமே நடந்திருந்தாலும் OpenAI நிறுவனம் தங்களுக்கு செப்.10 அன்றுதான இதுபற்றி சொன்னதாக தெரிவித்திருக்கிறார். அதுவும் கூட, சாதாரண பொதுவான ஒரு மெயில் ஐடிக்கு இந்த விஷயத்தை OpenAI கூறியிருந்ததாக, அந்நிறுவனத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையை அவர் கண்டித்திருந்தார்.

    Advertisement

    இந்த விஷயம் குறித்து நேரடியாக OpenAI சிஇஓ சாம் ஆலை்ட்மேனை தொடர்புகொண்டு ஆஸி பிரதமர் பேசியிருக்கிறார். "ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் நடந்த இந்த தவறு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று காட்டமாக கூறி.. இதனால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

    தவறை ஒப்புக்கொண்டிருக்கும் OpenAI நிறுவனம், "எங்களது ஏஐ மாடல்களிடம் சில கேள்விகளை கேட்டு உள்விவரங்களை ஆய்வு செய்தபோது அந்த மாடல்கள் நாங்கள் திட்டமிடாத சில தன்னிச்சையான செயல்களில் ஈடுபட்டுவிட்டன. தற்போது இத்தகைய தவறான ஏஐ செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று கூறியிருக்கிறது.

    Advertisement

    என்னதான விளக்கமளித்தாலும், இந்த ஹேக்கிங் குறித்து விசாரிக்க ஆஸி அரசு அவசர விசாரணை குழுவை அமைத்துள்ளது. மேலும் அரசின் மற்ற 3 சுகாதார இணையதளங்களையும் இந்த ஏஐ உளவு பார்த்ததா என்ற கோணத்திலும் தீவிர ஆய்வு நடந்து வருகிறது. இதுபோன்ற ஏஐ டெக்னாலஜிகளில் கட்டுப்பாடற்ற வளர்ச்சியை கட்டுப்படுத்த ஆஸி அரசு புதிய ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர உள்ளது.

    English Summary

    OpenAI AI: The situation with AI has evolved like the story of a creature that went from biting goats and cattle to finally biting a human; an AI agent from OpenAI has hacked an Australian government website, causing the government to express strong displeasure.