ஆக்டோபஸ்-ஸிடம் சிக்கிய மீனவர்.. இப்படி நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கலை.. நடுக்கடலில் நேர்ந்த கதி

  • பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டில் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஆக்டோபஸ்-ஸிடம் சிக்கினார். அவரது முகத்தை இறுக்கமாக ஆக்டோபஸ் பற்றி கொண்டது. இதனால் பதறிப்போன அந்த மீனவர் ஆக்டோபஸ்-ஸிடம் இருந்து போராடி தப்பினார். எப்படி தப்பினார்? என்ன நடந்தது? என்பது தொடர்பான வீடியோவுடன் முழு விவரம் பின்வருமாறு:

    Advertisement

    நடுக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. மோசமான வானிலை, புயல், மழை உள்ளிட்டவற்றால் மீனவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதவிர எதிரி நாடுகளின் கடற்படை தாக்குதல்களுக்கும் மீனவர்கள் உள்ளாகி வருகின்றனர்.

    Advertisement

    இதனால் மீனவர்கள் வாழ்க்கை சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் ஆக்டோபஸ் பிடியில் சிக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

    அதாவது பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மீனவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அவர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அவர் ஆக்போபஸ்-ஸிடம் சிக்கி கொண்டார். ஆக்டோபஸ் அவரது முகத்தில் இறுக்கமாக பிடித்து கொண்டது. இதனால் மீனவர் பதறிப்போனார்.

    ஆக்டோபஸ்ஸிடம் இருந்து விடுபட முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. ஆக்டோபஸ்ஸின் கால்கள் இறுக்கமாக அவரது தலை, முகத்தை பற்றிகொண்டது. இதையடுத்து அந்த மீனவர் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆக்டோபஸ் மீது தாக்கினார். இதனால் ஆக்டோபஸ் தனது பிடியை மெதுமெதுவாக விடுவித்த நிலையில் மீனவர் முழுவதுமாக விடுபட்டார். அதன்பிறகு ஆக்டோபஸ்-ஸை கடலிலேயே வீசி எறிந்தார்.

    Advertisement

    இந்த மீனவர் ஆக்டோபஸ் வசம் சிக்கி கொண்டதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆக்டோபஸ்-ஸை எடுத்து கொண்டால் அதற்கு 8 கரங்கள் உள்ளன. இதில் Suction Cups எனும் உறிஞ்சி கோப்பைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இதனை பயன்படுத்தி ஆக்டோபஸ்-கள் தரை மற்றும் ஒரு பொருளில் இறுக்கமாக பிடித்து கொள்ளும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக செயல்படக்கூடியது.

    இதனால் தான் ஆக்டோபஸ்-ஸிடம் சிக்கிய மீனவர் அதில் இருந்து விடுபட அதிக சிரமத்தை சந்தித்தார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அதுமட்டுமின்றி ஆக்டோபஸ் மிகவும் சென்சிட்டிவான உயிரினம். தனக்கு ஆபத்து ஏதேனும் ஏற்பட்டால் தன்னுடன் தொடர்பில் இருக்கும் பொருளை இறுக்கமாக பிடித்து கொள்ளும் குணம் கொண்டதாம்.

    Advertisement

    இதனால் தான் ஆபத்து என நினைத்து ஆக்டோபஸ் மீனவரின் முகத்தை இறுக்க பற்றி கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஆக்டோபஸ் எப்படி மீனவரின் முகத்தை இறுக பற்றியது என்பது புரியாத புதிராக உள்ளது.

    English Summary

    A fisherman in the Philippines found himself in a tight spot after being latched onto by an octopus while out at sea; the creature gripped his face firmly. Panicked, he struggled to break free from its hold. Here are the full details, including a video showing how he managed to escape and what exactly happened: