இத்தாலி பிரதமர் மெலோனி உடன் வைப் செய்யும் மோடி.. கலக்கல் வீடியோ.. மெலோடி சாக்லேட் பரிசு!

  • ரோம்: பிரதமர் நரேந்திர மோடியின் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் கடைசி கட்டமாக செவ்வாய்க்கிழமை இத்தாலியின் தலைநகர் ரோமுக்கு வந்தடைந்தார். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் இரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இத்தாலி வந்தார் மோடி. மோடியின் ஐந்து நாடு பயணத்தின் இது ஐந்தாவது மற்றும் இறுதி கட்டமாக இத்தாலி பயணம் அமைந்துள்ளது.

    Advertisement

    விமான நிலையத்தில் இந்திய பிரதமரை இத்தாலிய பிரதமர் மெலோனி தனிப்பட்ட முறையில் சென்று வரவேற்றார். இதுக்குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் "Welcome to Rome, my friend!" என்று பதிவிட்டு மோடி உடனான நெருங்கிய நட்பை வெளிப்படுத்தினார் மெலோனி. இரு தலைவர்களுக்கும் நெருங்கிய நணபர்கள், ஒவ்வொரு சந்திப்பிலும் இருவருக்குமான நட்பு உலகிற்கு காட்டி வருகின்றனர்.

    Advertisement

    இந்த பயணத்தில் இத்தாலிய பிரதமருக்கு, மோடி தனிப்பட்ட முறையில் 'மெலோடி' சாக்லேட் பாக்கெட்டை பரிசாக அளித்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சாக்லேட்டின் பெயர் 'மெலோடி' என கேட்டதும் மெலோனி மகிழ்ச்சியுடன் சிரித்தார். இதை வீடியோவாகவும் இருவரும் பதிவிட்டு வைப் செய்துள்ளனர்.

    2024ஆம் ஆண்டு மெலோனி தான் 'மெலோடி' (Meloni + Modi) என்ற சொல்லை உருவாக்கி இரு தலைவர்களின் நட்பை உலக நாடுகளுக்கு சமுக வலைத்தளங்கள் மூலம் உலகறிய செய்தார்.

    இதை நினைவுக்கூறும் வகையில் மோடி இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பார்லே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான மெலெடி சாக்லேட் பாக்கெட்-ஐ பரிசாக அளித்தார், மெலோனி தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்த வீடியோவில், "பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார்" என்று கூற, இதன் பெயர் என்ன தெரியுமான கேட்க மோடி மெலோடி என்று சொன்னது இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    நேற்று பிரதமர் மோடி இத்தாலிய பிரதமர் மெலோனியுடன் ரோமின் புகழ்பெற்ற கொலோசியம் (Colosseum) அரங்கத்துக்கு சென்று பார்வையிட்டார்.

    ஐந்து நாடு பயணம்

    பிரதமர் மோடியின் இந்த முக்கியமான அரசுமுறை பயணம் மே 15 அன்று தொடங்கியது. முதலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பின்னர் நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சென்றார். நார்வேயின் ஓஸ்லோவில் 3ஆவது இந்திய-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த 5 நாடுகள் பயணத்தின் இறுதி நிலையாக இத்தாலி வருகை அமைந்துள்ளது.

    இந்த பயணத்தின் மூலம் இந்தியா தனது முக்கிய வர்த்தக கூட்டாணி நாடுகளுடன் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இத்தாலியுடன் வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இந்தியாவுக்கான புதிய சந்தைகள் ஆகியவை மேலும் விரிவடையும்.

    Advertisement

    பிரதமர் மோடியின் இத்தாலி வருகை இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

    English Summary

    Prime Minister Narendra Modi arrived in Rome on May 19, 2026, for the final leg of his five-nation tour and delighted Italian Prime Minister Giorgia Meloni by gifting her a packet of popular Indian ‘Melody’ chocolates, sparking a heartwarming “Melodi” moment that is now going viral across social media. பிரதமர் நரேந்திர மோடி மே 19, 2026 அன்று ரோம் சென்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு பிரபல ‘மெலோடி’ சாக்லேட் பாக்கெட்டை பரிசளித்தார்.