PM Modi: துரந்தர் பிஜிஎம் போட்டு மோடியை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்! பரவும் வீடியோ!

  • பாரிஸ்: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்பு அளித்தார். பின்னர் அந்நாட்டு முறைப்படியும் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் இம்மானுவேல் மேக்ரான், துரந்தர் பட பிஜிஎம் இணைத்து வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், சுலோவோக்கியா, ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரான்ஸ் சென்றார். பிரான்ஸ் நாட்டில் உள்ள நீஸ் நகரில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற இமானுவேல் மேக்ரான், இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    துரந்தர் பட பிஜிஎம் போட்டு வீடியோ

    இந்த வீடியோவிற்கு பிஜிஎம் ஆக துரந்தர் படத்தின் பாடலான ஆரி ஆரி (Aari Aari) பாடலை பிஜிஎம் ஆக போட்டு பதிவிட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், பிரதமர் மோடியை கைகுலுக்கி வரவேற்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பின்னர் ஆரத்தழுவியும் வரவேற்பு கொடுக்கிறார். பின்னணியில் ஆரி ஆரி என்ற மியூஸிக் இசையுடன் வீடியோ ஓடியது.

    இந்தியாவில் பிரபலமான துரந்தர் படத்தின் பிஜிஎம் உடன் பதிவிட்டு இருக்க கூடிய இந்த வீடியோவுக்கு கீழே நெட்டிசன்கள் பலரும் சுவாரசிய பதிவுகளை பதிவிட்டுள்ளார். துரந்தர் தி ரிவெஞ்ச் பிரான்ஸ் அதிபரையும் கவர்ந்து விட்டது போல் தெரிகிறது என சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். மேக்ரான் தனது சமூக ஊடகப் பதிவுகளில் 'துரந்தர்' படத்தின் இசையை பயன்படுத்துவது இதுவே முதல் முறை அல்ல.

    Advertisement

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய பயணத்தை நிறைவு செய்தபோது அவர் பகிர்ந்த விடைபெறும் வீடியோவிலும் அந்தப் படத்துடன் தொடர்புடைய பிஜிஎம் இணைத்து பதிவிட்டு இருந்தார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே வளர்ந்து வரும் கலாச்சார உறவை வெளிப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபரின் பதிவு இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள். பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் முக்கிய அம்சமாக, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் உள்ளன.

    பிரான்சில் பிரதமர் மோடி நேற்று பாரத் இன்னோவேட்ஸ் 2026 திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவின் வலுவான தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களை உலக அரங்கில் விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முதன்மை திட்டமாக பாரத் இன்னோவோட்ஸ் 2026 உள்ளது. பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் முக்கிய அம்சமாக, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் உள்ளன.

    Advertisement

    மோடி பதிவிட்ட ட்வீட்

    செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வர்த்தகம், விண்வெளி மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விவாதங்களில் இரு தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர். பிரான்ஸ் அதிபரை சந்தித்தது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டு இருந்ததாவது:- எனது நண்பரும் பிரான்ஸ் அதிபருமான மேக்ரானுடன் இன்று நடைபெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை கருத்தில் கொண்டு, இருதரப்பு உறவை தனித்துவமான முக்கியமான கூட்டாண்மை என்ற உயர்ந்த நிலைக்கு மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். பாதுகாப்பு, தொழில்நுட்பம், விண்வெளி, தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், இன்னோவேஷன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து எங்கள் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது" என்றார்.

    English Summary

    PM Modi arrived in France on an official visit and was warmly welcomed by French President Emmanuel Macron. Macron shared a video of the reception on X, featuring the Dhurandhar movie background score, highlighting the strong friendship between the two leaders.