ஈரானுக்கு வர முடியாது.. அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி! பின்னணி

  • தெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் தான் ஈரான் அரசு சார்பில் வரும் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரானில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி பங்கேற்க மறுத்துள்ள நிலையில் நம் நாட்டில் இருந்து ஒரு மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் என 2 பேர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

    Advertisement

    அன்றைய தினம் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் ஈரானை பதம் பார்க்கின்றன. ஒரே நாளில் மட்டும் ஈரானில் மொத்தம் 100 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டெஹ்ரானில் உள்ள அரசு துறை அலுவலகங்கள் மீது 'அட்டாக்' நடத்தப்பட்டது.

    இதுதவிர ஈரான் பிரதமர் அலுவலகம், உளவுத்துறை அலுவலகம், அணுசக்தி திட்ட அமைப்பின் கட்டடம் உள்பட பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். டெஹ்ரானில் உள்ள தனது அலுவலக இல்லத்தில் வழக்கம்போல் பணி செய்தபோது அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அயதுல்லா அலி கமேனி மரணமடைந்தார். அதிகாரிகளுடன் அவர் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு தயாரானபோது ஏவுகணை துல்லியமாக தாக்கியது. இதில் அயதுல்லா அலி கமேனி மரணடைந்தார்.

    Advertisement

    ஈரானின் உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டாலும் கூட தொடர்ந்து போர் நடந்து வந்தது. கடந்த மாதம் (ஜுன்)தான் ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது. தற்போதும் ஈரான் - அமெரிக்கா இடையே கருத்து மோதல், தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படியான சூழலில் தான் வரும் 4ம் தேதி முதல் 9 ம்தேதி வரை இறந்த ஈரானின் முன்னாள் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது.

    ஈரான் தலைநகர் டெஹ்ரான், கோம் மற்றும் அயதுல்லா அலி கமேனி பிறந்த இடமான மஷாத் ஆகிய இடங்களில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. ஈரான் வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி ஊர்வலமாக இது அமைய உள்ளது. இதற்கான இறுதி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடியை தெலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்தியா - ஈரான் இடையே நல்லுறவு இருக்கும் நிலையில் இந்த அழைப்பு வந்துள்ளது.

    Advertisement

    ஆனால் பிரதமர் மோடியோ, அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைசசர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நம் நாடு ஈரானை போல் அமெரிக்கா, இஸ்ரேலுடன் நட்புறவு வைத்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தான் போரை தொடங்கி அயதுல்லா அலி கமேனியை கொன்றது. இப்போது பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்றால் அது அமெரிக்கா, இஸ்ரேல் உடனான உறவை பாதிக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

    Advertisement

    இறுதி சடங்கு நடைபெறும் அயதுல்லா அலி கமேனி ஈரானின் 2வது உச்சபட்ச தலைவர் ஆவார். ஈரானில் மன்னராட்சி நடந்து வந்தது. 1979ல் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி நடந்தது. மன்னராக இருந்து முகமது ரெசா பஹல்வியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து ஈரானின் முதல் உச்சபட்ச தலைவராக புரட்சியை முன்னெடுத்த ரூகொல்லா கோமேனி செயல்பட்டு வந்தார். இவர் 1989 ம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார்.
    இதையடுத்து ஈரானின் 2வது உச்சபட்ச தலைவராக கடந்த 198 9ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் தேதி அயதுல்லா அலி கமேனி பொறுப்பேற்றார். அன்று முதல் மரணம் வரை 2026 பிப்ரவரி 28 ம் தேதி ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது ஈரானின் உச்சப்பட்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Ayatollah Ali Khamenei Funeral: Iran's Supreme Leader, Ayatollah Ali Khamenei, passed away on February 28 following a joint attack by the United States and Israel. In this context, the Iranian government is organizing an event scheduled to take place in the country from the 4th to the 9th of the coming month. Prime Minister Modi has been invited to attend; however, as he has declined the invitation, reports indicate that a Union Minister and a Governor will represent the country at the event.