கொலம்பியாவில் சக்தி வாய்ந்த பூகம்பம்.. ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு!

  • பகோடா: கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கம் கொலம்பியாவிலிருந்து வெனிசுலா எல்லை வரை உணரப்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 7.4 அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

    Advertisement

    பூமியின் 107 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

    Advertisement

    கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கொலம்பியா தலைநகர் பொகோட்டா, இதர நகரங்களான மெடலின், கலி ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டது. இது தவிர பக்கத்து நாடான வெனிசுலா, ஈக்வடார் எல்லை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்க பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். நல்வாய்ப்பாக இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    English Summary

    Earthquake: A powerful earthquake has been recorded in Colombia. The tremor was felt from Colombia all the way to the Venezuelan border. It registered a magnitude of 7.4 on the Richter scale.