சிலுவை விழுவதை முன்கூட்டியே கணித்தாரா பாதிரியார்? ஒருநாள் சாக போகிறோம்! பதறவைக்கும் 27 நிமிட வீடியோ

  • ஈக்வடார்: "நாம் எல்லாருமே ஒருநாள் சாக போகிறோம்" என்று தேவாலயத்தில் திருப்பலி நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் பேசினார்.. வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் சர்ச்சில் விரிவாக எடுத்து சொல்லி கொண்டிருந்தார்.. அப்போதுதான் இந்த கொடுமை நடந்தது.. அவர் பேசிய சில நிமிடங்களிலேயே யாரும் எதிர்பார்க்காத விபரீதம் நடந்துவிட்டது.. அவருக்கு பின்னால் சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய சிலுவை திடீரென விழுந்ததில் பாதிரியார் உயிரிழந்தார்.

    Advertisement

    தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குவாயாகில் நகரில் உள்ள, "அவர் லேடி ஆஃப் பெர்பெச்சுவல் ஹெல்ப் தேவாலயத்தில்" (Our Lady of Perpetual Help Church) அக்டோபர் 17-ம் தேதி சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.

    Advertisement

    இங்கு பங்குத் தந்தையாக பணியாற்றி வந்தவர் பாட்ரிசியோ ஆல்ஃபிரெடோ சான்செஸ் மோலினாரி (Patricio Alfredo Sánchez Molinari). அவருக்கு வயது 53...

    அன்றைய தினம் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாதிரியார் பீடத்தின் முன்பாக நின்று இறைமக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    சாய்ந்த சிலுவை

    "ஒருநாள், இங்கே இருக்கும் நாம் அனைவருமே இறந்துபோவோம்... நாம் நேரத்தை எதுக்காக செலவிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.. முக்கியமில்லாத விஷயங்களுக்காக செலவிடும் நேரத்தைவிட, கடவுளுடனும் நமக்கு பிரியமானவர்களுடனும் செலவிடும் நேரத்துக்கு அதிக அர்த்தம் இருக்கிறது. குறிப்பாக செல்போனில் நேரத்தை வீணாக்காமல் கடவுளுக்கும் குடும்பத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.

    Advertisement

    இப்படியாக வாழ்க்கை, மரணம், நம்பிக்கை, குடும்ப உறவுகள் பற்றிப் பேசி கொண்டிருந்த பாதிரியார் உடனே, அங்கிருந்தவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.

    27 நிமிடங்கள் வீடியோ

    அடுத்த சில நிமிடங்களில் சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய மரச் சிலுவை திடீரென கழன்று முன்பக்கமாக விழுந்தது. அது பாதிரியாரின் தலையின் பின்புறத்தில் பலமாக மோதியது. அப்போது பீடத்தின் முன்பாக நின்றிருந்த அவர் நிலைகுலைந்து கீழே சரிந்து விட்டார்.. பாதிரியார் மீண்டும் எழுந்திருக்கவில்லை... இதைப் பார்த்த தேவாலயத்தில் இருந்தவர்கள் பதறிப்போனார்கள்.

    சுமார் 27 நிமிடங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில் இந்த விபத்து பற்றி தெரியவந்துள்ளது.. அதுவரை ஓடி கொண்டிருந்த நேரலை வீடியோவில் இந்த காட்சிகள் பதிவாகி விட்டன.. பிறகு உடனடியாக வீடியோ நீக்கப்பட்டது. எனினும், விபத்தின் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. அந்த வீடியோவில் சிலர் உடனடியாக அவருக்கு உதவ ஓடுகிறார்கள்.. உதவி கேட்டு அலறும் குரல்களும் வீடியோவில் பதிவாகியிருந்தன.

    Advertisement
    பாதிரியார் அங்கியுடன் மார்க்கெட்டுக்கு போன உயரமான நடிகர்! ரகுவரன் நடிக்க கமல் தயங்கினாரா? உண்மை என்ன

    பதற வைக்கும் வீடியோ

    பாதிரியாரின் மரணத்தை குவாயாகில் மறைமாவட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. அவர் மத்திய விகாரியேட் பகுதியில் உள்ள பெர்பெச்சுவல் ஹெல்ப் தேவாலயத்தின் பங்குத் தந்தையாகப் பணியாற்றி வந்தவராம்.. மேலும், அவர் மிகப் பரிசுத்த மீட்பரின் சபையின் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
    .
    பாதிரியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மறைமாவட்டம், "அவர் இறைவனின் இல்லத்துக்கு சென்றுவிட்டார்" என்று வருத்தத்துடன் கூறி உள்ளது.. அத்துடன் பாதிரியாரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தது.

    Advertisement

    நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்தின் விடியோ காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும், மரணத்தைப் பற்றி அவர் பேசி கொண்டிருக்கும்போதே இப்படி சிலுவை மேலே சாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

    English Summary

    Prediction Did Ecuador Priest Foresee the Crucifix Falling? "We Will All Die".. Shocking 27-Minute Video