பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர், புறநகர் பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்னர். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக மக்களும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். இதனால், பிரான்சில் கடந்த சில நாட்களாக ஒரே பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்ட நிலையில், தற்போது நிலமையை கட்டுக்குள் கொண்டு வர அந்த நாட்டில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கல்வி முறையில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்வி நடைமுறையில் மாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, நீண்ட நேர வகுப்புகள் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். பிரான்சில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு இடது சாரி அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளன.
பிரான்சில் குடியேறிய புலம் பெயர் மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் மெர்சிலி, லியோன் லிமோகாஸ் ரென்னிஸ் செயின் இடின உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்தது. பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், பொதுச்சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகள் அடித்து துவம்சம் செய்யப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், பிரான்சின் வடக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு நேரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரான்சில் இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரண்டு நாட்கள் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வடக்கு பகுதியில் உள்ள நான்கு நகரங்களில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. பிரான்சில் அடுத்த கட்ட போராட்டம் வரும் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. பொது அமைதியை மீட்டு கொண்டு வந்து நிலைநிறுத்துவது தனது கடமை என்று கூறிய பிரான்ஸ் பிரதமர், பாரிஸ் நகரில் பகுதியளவு ஊரடங்கு இருக்கும் என்று கூறினார். தேவைப்பட்டால் நாடு முழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை வைத்து பிற ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டம் வெடித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் மிலனில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, போர்ச்சுகலில் போராட்டம் நடைபெற்றுள்ளது.ஊரடங்கு உத்தரவு
பற்றி எரியும் பிரான்ஸ்.. வன்முறையில் இறங்கிய 5 லட்சம் பேர்.. என்ன தான் பிரச்சனை?
நாடு முழுக்க அவசரநிலை பிறப்பிக்கப்படும்
ஆன்லைனில் சேட் செய்த பெண்ணை பார்க்க சொத்துகளை விற்று 1,900 கிமீ போன நபர்.. நேரில் பார்த்தால் ஷாக்