லண்டன் சுறாக்களுக்கு நடுவே காதலன் செய்த வேலை.. திடீர்னு கட்டிப்பிடித்த காதலி! என்ன நடந்தது?

  • லண்டன்: காதலியிடம் லவ் புரொபோஸ் செய்ய வேண்டுமானால், இதற்காகவே ஆண்கள் பலரும் அழகான இடத்தைத் தேடுவார்கள்.. சிலர் பீச், மலைப்பகுதி, ஸ்டார் ஓட்டல் என வித்தியாசமான இடங்களைத் தேர்வு செய்து, தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். காதலிக்கு மிகவும் பிடித்தது சுறாக்கள் என்றால், சுறாக்களுக்கு நடுவிலேயே தன்னுடைய விருப்பத்தை கேட்ட நினைத்துள்ளார்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

    Advertisement

    இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையர், வென்டோவர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வால்ஷ். இவருடைய காதலி பெயர் பேஜ் குக்... பேஜ் குக்கிற்கு சின்ன வயசிலிருந்தே கடல் வாழ் உயிரினங்கள் மீதும், குறிப்பாக கூர்மையான பற்களைக் கொண்ட சுறா மீன்கள் என்றார் கொள்ளை பிரியமாம்..

    Advertisement

    இங்கிலாந்து காதல் ஜோடி

    இந்த விஷயம் தெரிந்த காதலன் ஜேம்ஸ், தன்னுடைய காதலிக்கு மறக்க முடியாத ஒரு நினைவை பரிசை வழங்க நினைத்தார்.. அதுக்காக கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையின்போது, லிங்கன்ஷையரில் உள்ள புகழ்பெற்ற "ஸ்கெக்னஸ் அக்குவாரியத்தில்" சுறாக்களுடன் நீந்தும் "ஸ்கூபா டைவிங்" அனுபவத்திற்கான டிக்கெட்டை சர்ப்ரைஸ் பரிசாகக் கொடுத்தார்.

    வெறும் நீச்சலோடு நிறுத்தாமல், அந்த ஆழ்கடல் சூழலிலேயே தனது திருமண ஆசையை தெரிவிக்கவும் ஜேம்ஸ் திட்டமிட்டார்... இதற்காக அக்குவாரிய ஊழியர்களுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்... மேலும், லவ் சொல்லும்போது, காதலிக்கு அணிவிப்பதற்காக வைர மோதிரத்தை வாங்கினார்..

    Advertisement

    சுறாக்கள் நடுவே காதல்

    ஆனால், தண்ணீருக்குள் செல்லும்போது, அந்த வைர மோதிரத்தை சுறாக்கள் தவறுதலாக கவ்விச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, நிச்சயதார்த்த மோதிரத்தை தனது "வெட்சூட்" உடைக்குள்ளும் மணிக்கட்டிலும் பத்திரமாக மறைத்து வைத்துக் கொண்டார்.

    கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, 2 பேரும் சிறப்பு நீச்சல் ஆடைகளை அணிந்து சுறாக்கள் நிறைந்த தொட்டிக்குள் இறங்கினர். திட்டமிட்டபடி அக்குவாரிய ஊழியர்கள், மற்ற நீச்சல் குழுவினரிடமிருந்து இந்த ஜோடியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று தொட்டியின் மணல் தரையில் உட்கார வைத்தனர். பிறகு இருவரும் வெட்சூட் அணிந்து, ஸ்கூபா உபகரணங்களுடன் தண்ணீருக்குள் சென்றனர்.

    Advertisement

    Will you Marry me

    அப்போது சுறாக்கள் சுற்றி நீந்திக் கொண்டிருக்க, கடலுக்கு அடியில் உள்ள மணல் பகுதியில் ஜேம்ஸ் பேஜுடன் முழங்காலிட்டு உட்கார்ந்தார்.. அடுத்த நொடியே, "Will you marry me?" என்று எழுதப்பட்ட பலகையை பேஜிடம் காட்டினார்.

    அதைப் பார்த்த பேஜுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிர்ச்சியில் தனது ஸ்கூபா முகமூடியை கையால் பிடித்துக்கொண்டார். தன்னைச் சுற்றி சுறாக்கள் வட்டமிடும் சூழலில், இந்த திடீர் சர்ப்ரைஸைக் கண்ட பேஜ் குக் அதிர்ச்சியிலும் பரவசத்திலும் உறைந்து போனார்... பிறகு பேஜ் தனது கையை உயர்த்தி "ஓகே" என்று சைகை காட்டினார். உடனே இருவரும் தண்ணீருக்குள்ளேயே கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

    Advertisement

    திக்கு முக்காட வைத்த புரபோசல்

    இதுகுறித்து காதலி பேஜ் சொல்லும்போது, "சுறாக்களுடன் ஸ்கூபா டைவிங் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் காதலன் என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டதை எதிர்பார்க்கவில்லை.. ஒரு கட்டத்தில் நான் சுறாக்கள் இருக்கும் தொட்டிக்குள் இருப்பதையே மறந்துவிட்டேன்.. அதிர்ச்சியில் வேகமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்ததால், மூச்சே தீர்ந்துவிடுமோ என்று முதலில் நினைத்தேன்" என்கிறார்.

    தண்ணீருக்குள் திருமண புரபோசல் செய்து, நிச்சயதார்த்தம் மோதிரத்தையும் அணிவித்து, காதலர்கள் கட்டிப்பிடித்து கொண்ட இந்த நிகழ்வை, அக்வேரியம் அப்படியே வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, ஜேம்ஸ் மற்றும் பேஜுக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்களும் இந்த ஜோடிக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்தை சொல்லி கொண்டிருக்கிறார்கள்...!!

    English Summary

    England Underwater Proposal.. James’ Shark Surprise Left His Girlfriend Speechless!