தெஹ்ரான்: சில உறவுகளுக்கு வாழ்க்கை முழுவதும் காத்திருந்தாலும், சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடுகிறது.. அப்படியொரு சூழலில் சிக்கியவர்கள்தான் ஈரானைச் சேர்ந்த 2 இளம் உள்ளங்கள். இருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதில் ஒரு முடிவு எடுக்கப்பட்ட விதமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் இப்போது உலக மக்களை கலங்கடித்துள்ளது. அப்படி என்ன நடந்தது?
ஈரானை சேர்ந்தவர் அலிரேசா செபாஹி.. இவருக்கு 25 வயதாகிறது.. மக்ஷாத் கேஷானி என்ற 22 வயது பெண்ணை காதலித்தார்.. அந்த பெண்ணும், அலிரேசாவை உயிருக்கு உயிராக நேசித்தார்.. இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினரும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாககூறி, 2 பேருமே கைது செய்யப்பட்டனர். வெவ்வேறு ஜெயில்களில் அடைக்கப்பட்டதால், இருவராலும் நேரில் சந்திக்கக்கூட முடியவில்லை. அலிரேசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது... மக்ஷாத் கேஷானிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. விரைவில் அலிரேசாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற பயமும் அச்சமும் கொண்ட கேஷானி, எப்படியாவது அவரைத் தன் கணவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சிறையிலேயே திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும் அனுமதியும் பெற்றார். இதனிடையே, அலிரேசாவின் மரண தண்டனை நாளும் நெருங்கிவிட்டது.. பிறகு கேஷானியின் திருமண விருப்பம் குறித்து செபாஹியிடம் சொன்னபோது, அவர் கண்ணீர் விட்டுத் கதறி அழுதாராம். பிறகு இதையடுத்து சிறை நிர்வாகம் தரப்பில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 4-ம் தேதி, இருவரின் அப்பாக்களும், தங்கள் பிள்ளைகளின் சார்பில் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தனர். மனித உரிமை வழக்கறிஞர் அமிர்சலார் டாவூதி திருமணத்துக்கான வாசகங்களை படித்தார். ஆனால் மணமக்கள் 2 பேருமே ஜெயிலில் இருந்ததால், அவர்கள் நேரில் இல்லாத நிலையில், ஆடியோ ரிக்கார்ட் மூலமாக திருமணம் நடந்தது.. சிறையில் தனது காதலியைத் தொலைபேசி வாயிலாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.... இருவரின் தந்தைகளும் தொலைபேசியில் இணைந்திருக்க, வழக்கறிஞர்களும் சட்ட நடைமுறைகளை நடத்தி வைத்துள்ளனர்.. மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவே முடியாது என்பதை நன்கு அறிந்த அந்த இளம் காதலர்கள், தொலைபேசி வாயிலாகவே திருமண உறுதிமொழி ஏற்று முறைப்படி மணமுடித்துக் கொண்டனர்... மணமகளின் வீட்டிலிருந்து குர்ஆன் பிரதி, சில இனிப்புகள் மற்றும் ஒரு சிவப்பு ரோஜா மட்டும் பாரம்பரிய வரதட்சணையாக வழங்கப்பட்டன.. ஆனால் இந்தச் சட்ட நடைமுறைகள் அனைத்தும் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்துள்ளன. இந்நிகழ்வின்போது, அங்கிருந்த சில சிறை ஊழியர்களும் கண் கலங்கி விட்டார்களாம். திருமணம் முடிந்தவுடன், அந்த இளைஞர் நேராக மரண தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.. அலிரேசா உயிரும் சில நொடிகளில் பிரிந்தது.. ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்டிருந்ததாம். ஆனால், அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கோமாவில் சென்றுவிட்டாராம்.. பிறகு சிகிச்சைக்கு பிறகு, மீண்டெழுந்த நிலையில்தான், இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருமணத்தின் ஒலிப்பதிவை வழக்கறிஞர் அமிர்சலார் டாவூதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் போலியான ஆடியோவை இணையத்தில் பரப்புகிறார் என்று சொல்லி, இந்த வழக்கறிஞரையும் கைது செய்துவிட்டனர். மக்ஷாத் இன்று சிறையில் தனியாக இருக்கிறார். வாழ்நாள் முழுவதும் கணவருடன் இணைந்து வாழ வேண்டும் என்ற கனவோடு திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக்கொண்ட இருவருக்கும், சேர்ந்து வாழும் வாய்ப்பே கிடைக்கவில்லை... இருவரும் கண்ட கனவு, கனவாகவே நின்றுவிட்டது.. ஆக, கணவர் மரணமடைந்துவிட்டார்.. ஆனால், இவர்களது காதல் மரணமடையவில்லை..!!!அலிரேசாவுக்கு மரண தண்டனை
தொலைபேசி மூலம் திருமணம்
மாரடைப்பு - கோமா - மரண தண்டனை
வழக்கறிஞரும் கைது