'அவப்பெயர்.. இந்திய வரலாற்றிலேயே முதல் முறை'.. லண்டன் மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

  • லண்டன்: "தமிழ்நாடு முதலமைச்சரின் ரசிகர்களின் சிந்தனையற்ற செயல்களால் அமைதி சீர்குலைந்துள்ள லண்டன் மக்கள், இந்திய மக்கள் மற்றும் லண்டனில் வாழும் தமிழக மக்களிடம் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, வெளிநாட்டுக்குச் சென்ற ஒரு பதவியில் இருக்கும் முதலமைச்சரால் சர்வதேச அளவில் அவமானம் ஏற்பட்டுள்ளது" என பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டிற்காக வெளிநாட்டு தொழில் முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் . இதற்காக முதல்வர் விஜய், லண்டனில் உள்ள தி ஷர்ட் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அந்த ஓட்டலுக்கு வெளியே இங்கிலாந்து வாழ் தமிழக மக்களையும் ரசிகர்களையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

    Advertisement

    இதனை அறிந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் நட்சத்திர விடுதிக்கு வெளியே குவிந்தார்கள். ஒருகட்டத்தில் கூட்டம் அதிகமானதால் சமானியமாக மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்க்கு லண்டன் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் குழுவில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவர், நட்சத்திர விடுதிக்கு வெளியே கூடியிருந்த மக்களிடம், பாதுகாப்பு காரணம் கருதி நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக மைக் மூலம் அறிவித்தார்.அதன்பிறகே கூட்டம் மெதுவாக கலைந்து சென்றது. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், " தமிழக முதல்வராக உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள், லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையின் நுழைவாயிலை மறித்ததால், அவசர காலச் சேவைகளும் அவசர ஊர்திகளின் இயக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டடன!

    Advertisement

    மருத்துவமனைக்கு முன்பாகச் சட்டவிரோதமாகக் கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை லண்டன்வாசிகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்!

    ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில், ஒரு மாநில முதல்வரின் ரசிகர்களின் இந்தச் சிந்தனையற்ற செயல்கள் இங்கிலாந்தில் உள்ள முழு இந்திய சமூகத்தையும் பாதிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளன!

    லண்டன் பெருநகரக் காவல் துறையினர் முதல்வர் விஜய்யின் ஆதரவாளர்களிடம் மருத்துவமனையை மறிக்காமல் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கும் காட்சியை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்!

    இருப்பினும், இந்தக் கூட்டம் காவல்துறையின் அறிவுறுத்தல்களைக் கேட்காமல் பொதுமக்களுக்குத் இடையூறு விளைவிப்பதைக் காண முடிகிறது! தமிழ்நாடு முதலமைச்சரின் ரசிகர்களின் இந்தச் சிந்தனையற்ற செயல்களால் அமைதி சீர்குலைந்துள்ள லண்டன் மக்கள், இந்திய மக்கள் மற்றும் லண்டனில் வாழும் தமிழக மக்களிடம் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்!

    Advertisement

    இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, வெளிநாட்டுக்குச் சென்ற ஒரு பதவியில் இருக்கும் முதலமைச்சரால் சர்வதேச அளவில் அவமானம் ஏற்பட்டுள்ளது." இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    "Vijay must apologize to the people of London. This is the first time in Indian history that a sitting Chief Minister has brought international disrepute while on an overseas trip," asserted WengerFan, a journalist based in London.