ஜெர்மனியில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ.. இந்தியர்கள் 3 பேர் பலி! ரோமானிய நபர் கைது! கொலையா?

  • பெர்லின்: ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மின்சாதனக் கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், தீ வேண்டுமென்றே வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் ரோமானிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்று ஜெர்மனி. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். தொழில், வேலைவாய்ப்பு, கல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டவர்கள் பலரும் இங்கு வசித்து வருகிறார்கள்.

    Advertisement

    இந்த சூழலில், ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள நகரான ஹோஃப்ஸ்டெட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ ஏற்பட்டது. அதிகாலை 4.15 மணியளவில் கட்டிடம் தீ பற்றி எரிந்த நிலையில், அவசரகால மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த மீட்பு குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    எனினும் தீயில் சிக்கி 25 மற்றும் 27 வயதுடைய 2 பெண்களும், 26 வயதுடைய ஒரு ஆண் என 3 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் 3 பேரும் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயின் காரணமாக மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

    Advertisement
    ஜெர்மனியில் நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. கன்னியாகுமரி மாணவனுக்கு கனவிலும் நடக்கக்கூடாத சம்பவம்

    அவர்கள் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கட்டிடத்தில் தீ பிடித்தது எப்படி? என்று விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதே கட்டிடத்தில் வசித்து வந்த ரோமானிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யும் நோக்கில் சதி செயலில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடைபெறுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாதனக் கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தீ வேண்டுமென்றே வைக்கப்பட்டதா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    English Summary

    Three Indians have lost their lives in a fire at an apartment complex in Germany. Officials have stated that an electrical fault is unlikely to have caused the blaze, raising suspicions of arson; consequently, a Romanian national has been arrested and is currently being questioned.