அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா!

  • உலக நாடுகள் மீதும், இறக்குமதி பொருட்கள் மீதும் மாறி மாறி வரி போட்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். விவசாயம் மற்றும் தொழில்துறை உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் குறைக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    தற்போது 25 சதவீதமாக இருக்கும் வரியை 15 சதவீதமாகக் குறைக்கும் இந்த முடிவு, அடுத்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது அமெரிக்க விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அமெரிக்க பொருளாதாரம், நிதி நிலை, பணவீக்கம் நாளுக்கு நாள் மோசமாகி வரும் வேளையில் வரியை குறைத்தால் மட்டுமே தற்போதைய நிலைமை மேம்படும் என தெரிகிறது. இதன் காரணமாக டிரம்ப் கண்மூடித்தனமாக விதித்த வரி தற்போது குறைக்க துவங்கியுள்ளார்.

    விவசாய உபகரணங்களுக்கு வரி குறைப்பு

    அமெரிக்க விவசாயத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், கம்பைன், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களுக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, விவசாய உற்பத்தியாளர்களின் செலவுகளை குறைத்து, துறையில் அதிக முதலீட்டை ஊக்குவிக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விவசாயம் உலக அளவில் முக்கியப் பங்கு வகிப்பதால், இந்த வரி குறைப்பு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

    Advertisement

    விவசாய உபகரணங்களைத் தவிர, புல்டோசர், ஃபோர்க்லிஃப்ட் உள்ளிட்ட தொழில் உபகரணங்களுக்கும் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த உபகரணங்களுக்கு 15 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்.

    மேலும், இந்த உபகரணங்களில் 85 சதவீதம் அமெரிக்காவின் எஃகு அல்லது அலுமினியம் பயன்படுத்தப்பட்டிருந்தால், வரி 10 சதவீதமாகக் குறையும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அமெரிக்க உள்நாட்டு உலோகத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.

    டிரம்ப்-ன் திட்டம்

    இந்த வரி குறைப்பு, அமெரிக்காவின் தொழில் துறையை வலுப்படுத்தும் தற்காலிக நடவடிக்கையாகும். 2027 டிசம்பர் வரை அமலில் இருக்கும் இந்த வரி குறைப்பு திட்டம், உடனடி முதலீடுகளை ஊக்குவித்து, நாட்டின் தொழில்துறையை மீட்டெடுக்க உதவும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் போட்டியில் அமெரிக்கா வலுவான நிலையில் இருக்க இந்த முடிவு முக்கியப் பங்கு வகிக்கும்.

    Advertisement

    இந்தியாவுக்கு லாபமா?

    அமெரிக்காவின் இந்த வரி குறைப்பு, உலக வர்த்தகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தியா போன்ற நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ள நிலையில், தொழில் உபகரணங்கள் ஏற்றுமதியில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதிமுறைகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சில சவால்களை ஏற்படுத்தலாம்.

    English Summary

    US President Donald Trump has announced a 10-percentage-point reduction in import tariffs on agricultural machinery and industrial equipment, lowering duties from 25% to 15% until the end of next year. The move aims to reduce costs for American farmers and manufacturers while encouraging domestic investment and strengthening the country’s industrial base.