ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்!

  • அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 110 நாட்களில் இல்லாத வகையில் டிரம்ப் ஒரு முக்கியமான விஷயத்தை கூறி உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

    Advertisement

    அமெரிக்கா இதுவரை ஈரான் மீது போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை மட்டுமே கொண்டு வான்வழித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது முதல் முறையாகத் தனது ராணுவ வீரர்களை நேரடியாக ஈரான் மண்ணில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் இன்று இரவே ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

    கார்க் தீவைக் குறிவைக்கும் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் முக்கிய வர்த்தக மையமான 'கார்க் தீவை' (Kharg Island) அமெரிக்கப் படைகள் தங்களின் முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

    பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள இந்த கார்க் தீவு, வெறும் 8 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட சிறிய இடமாக இருந்தாலும், ஈரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய பகுதியாகும்.

    Advertisement

    ஏனெனில், ஈரானின் ஒட்டுமொத்தக் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் இந்த ஒரே ஒரு தீவின் வழியாகத்தான் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளுக்கு சுமார் 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஈரானின் தீவை அமெரிக்கா ராணுவத்தை கொண்டு மொத்கமாக கைப்பற்ற கணக்கு போட்டுள்ளது.

    வெனிசுலா பாணியில் மெகா பிளான்

    ஈரானின் இந்த எரிசக்தி வளத்தையும், வர்த்தகத்தையும் கைப்பற்றுவது குறித்து விளக்கியுள்ள அதிபர் டிரம்ப், கார்க் தீவை வெனிசுலா பாணியில் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    இதன் மூலம் ஈரான் நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சந்தையின் முழு கட்டுப்பாட்டை அமெரிக்கா கைப்பற்ற திட்டமிட்டு போட்டு உள்ளது.

    உச்சக்கட்டப் பதற்றம்

    டிரம்ப் ராணுவ வீரர்களை கொண்டு கார்க் தீவை கைப்பற்றுவது குறித்து வெளியான அறிவிப்பு இதுவரை நடந்து வந்த அமெரிக்க - ஈரான் போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகவும் ஆபத்தான கட்டமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த இமாலய மிரட்டலைத் தொடர்ந்து, ஈரான் அரசின் நிலைப்பாடு என்ன..?

    English Summary

    US President Donald Trump has issued a major warning on Truth Social that American forces will launch a large-scale attack on Iran tonight, with plans to deploy troops directly on Iranian soil for the first time to seize control of the strategic Kharg Island.