இந்தியர்கள் சென்ற கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்.. கருடங்கடலில் பதற்றம்! என்ன நடந்தது?

  • மாஸ்கோ: இந்திய சிப்பந்திகள் 23 பேருடன் சென்ற கருங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. அப்ராமக்ஸ் ரியோ என்ற அந்த டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் தீ பற்றி எரிந்ததாகவும், அந்த கப்பலில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த 23 சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்யா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே அமைந்து இருக்கும் கருடங்கடல் பகுதி வணிக கப்பல்களின் முக்கிய வழித்தடமாக உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்த பகுதியில் செல்லும் கப்பல்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

    Advertisement

    இந்திய சிப்பந்திகள் 23 பேர் மீட்பு

    இந்த சூழலில் லைபிரியன் நாட்டு கொடியுடன் கருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அப்ராமக்ஸ் ரியோ என்ற அந்த டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் தீ பற்றி எரிந்துள்ளது. அந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 23 சிப்பந்திகள் பணியாற்றியதாக கூறப்படும் நிலையில், அனைவரும் உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    கடற்கரை மூடப்பட்டுள்ளது

    கடற்படை டிரோன் கொண்டு இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. கப்பலில் கச்சா எண்ணெய் இருந்ததால் தீயின் அடர்த்தி அதிகமாக இருப்பதாகவும் இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கடலோர நகரமான சோச்சி சிட்டி கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது.

    Advertisement

    கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பிராந்தியமான கிராஸ்னோடார் பகுதிக்கு அருகே எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். சோச்சி பகுதியில் பெரும் கருப்புப் புகை மண்டலம் தெரிவதால் கடற்கரை மூடப்பட்டுள்ளது. அங்குள்ள காற்றின் தரம் மற்றும் நீரின் தரதை கண்காணித்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    துருக்கி சரக்கு கப்பல் மீது தாக்குதல்

    நேற்று முன் தினம், கருங்கடலில் ரோமானிய பிராந்திய பகுதியில் சென்று கொண்டிருந்த துருக்கிக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த சில சிப்பந்திகள் பலியாகினர். இந்தியர்கள் உள்பட மேலும் சிலரும் காயம் அடைந்தனர். இத்தகைய தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா தனது கடும் கண்டனத்தை ரஷ்யாவிடம் பதிவு செய்து இருந்தது.

    Advertisement

    இந்த தாக்குதல் நடந்த மறுநாளே உக்ரைன், டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. கருங்கடல் பகுதியில் கப்பல்களை குறிவைத்து தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தையும் கப்பல்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    English Summary

    Ukrainian Drone Attack: Russia has accused Ukraine of launching a drone attack on a ship carrying 23 Indian crew members in the Black Sea. The Russian transport authority stated that the tanker, named *Abramax Rio*, caught fire following the attack, but all 23 Indian crew members on board were safely rescued.