பேச தொடங்கியதும் வெளியேறிய ஐநா பிரதிநிதிகள்! கடும் டென்ஷனில் வார்த்தையை விட்ட நெதன்யாகு! ஒரே பரபரப்பு

  • நியூயார்க்: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் தனது பேச்சை தொடங்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தயாரானார். அவர் பேச ஆரம்பிக்கும் முன்பாக கூட்ட அரங்கில் இருந்து 12 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ய ஆரம்பித்தனர். இதனை பார்த்த டென்ஷன் ஆன பெஞ்சமின் நெதன்யாகு, தார்மீக கோழைகள் என்றும் இரட்டை வேடம் போடுபவர்கள் எனவும் கடுமையாக விமர்சித்தார்.

    Advertisement

    அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் அமெரிக்காவில் குவிந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களில் அமெரிக்கா சென்று இருக்கிறார்கள். அந்த வகையில், ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உரையாற்றினார்.

    Advertisement

    பெஞ்சமின் நெதன்யாகு பேச தொடங்கியதும் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்த பிரதிநிதிகள் பலரும் வெளியேற தொடங்கினர். இஸ்ரேல் மேற்கு கரையை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு அவர் பேச தொடங்கும் முன்பே எழுந்தது. எனினும், இதை கண்டு கொள்ளாமல் பெஞ்சமின் நெதன்யாகு போடியத்தில் ஏறி பேச தொடங்கியதும் பிரதிநிதிகள் பலர் அரங்கை விட்டு வெளியேறினர். சிலர் வெளியேறாமல் நின்று பெஞ்சமின் நெதன்யாகுவை பாராட்டி கைகளையும் தட்டினர்.

    இஸ்ரேல் வாழ்க என கோஷமும் எழுப்பினர். அதே நேரத்தில் தனது பேச்சு தொடங்கும் முன்பாக , அரங்கில் இருந்து வெளியேறியவர்களை கடுமையாக விமர்சித்த பெஞ்சமின் நெதன்யாகு, "இந்த அரங்கிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் தார்மீகக் கோழைகள் யாரேனும் இருந்தால், தயவுசெய்து இப்போதே வெளியேறுங்கள்" என்றார்.

    Advertisement

    தொடர்ந்து பேசிய நெதன்யாகு, இங்கு வெளியேறிய பிரதிநிதிகளின் நாடுகள் சில, என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து இருக்கின்றன. இதைவிட அதிர்ச்சியூட்டும் இரட்டை நிலைப்பாட்டை கற்பனை செய்வது கடினம். ஆனால், அதுதான் உண்மை . ஈரான் அணு ஆயுத தளங்களை அழிப்பது கடினமானது. ஆனால் அதைச் செய்யாமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் உயிரிழந்திருப்போம்" என்றார்.

    English Summary

    Benjamin Netanyahu, Israeli Prime Minister prepared to begin his speech at the UN General Assembly. Just as he was about to start, representatives from more than a dozen countries began walking out of the hall. Visibly agitated by this, Netanyahu harshly criticized them, calling them "moral cowards" and "hypocrites."