பூமிக்கு கொடூர பேரழிவு காத்திருக்கு! வேகமாக அழியும் பிரபஞ்சம்.. அதிர்ந்த ஆய்வாளர்கள்

  • லண்டன்: யுனிவர்ஸ் எனப்படும் பேரண்டத்தின் ஆயுட்காலம் ஸ்பெயின் நாட்டின் ஆய்வாளர்கள் இப்போது சில முக்கியமான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பிரபஞ்சம் இன்னும் பல டிரில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் என முன்பு ஆய்வாளர்கள் கணித்திருந்த சூழலில், எதிர்பார்த்ததை விட பல டிரில்லியன் ஆண்டுகள் முன்னதாகவே இந்த பேரண்டம் முற்றிலும் அழியும் எனப் புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

    Advertisement

    எந்தவொரு பொருளாாக இருந்தாலும் தோற்றம் என இருந்தால் அழிவு என்று ஒன்று இருக்க தான் செய்யும். அப்படி தான் நமது இன்த யுனிவர்ஸுக்கும் அழிவு இருக்கவே செய்கிறது. இது தொடர்பாக கடந்த பல காலமாகவே தொடர்ச்சியாக ஆய்வுகளும் கூட நடந்து வருகிறது.

    Advertisement

    புதிய ஆய்வு

    இதற்கிடையே ஸ்பெயினில் உள்ள 'டோனோஸ்டியா சர்வதேச இயற்பியல் மையத்தின்' (Donostia International Physics Centre) விஞ்ஞானி டாக்டர் ஹோங் நஹான் லுயூ என்பவர் தனது டீமுடன் இணைந்து மற்றும் அவரது குழுவினர் இணைந்து புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதில் தான் சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. பெருவெடிப்பு நிகழ்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதில் இருந்து அதன் ஒட்டுமொத்த ஆயுட்காலம் வெறும் 33.3 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே என்று தெரிவித்துள்ளனர்..

    சீக்கிரமே அழியும்

    அதாவது பிரபஞ்சத்தின் மொத்த ஆயுள் 33.3 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகும். பிரபஞ்சத்தின் தற்போதைய வயது 13.8 பில்லியன் ஆண்டுகளாக உள்ளது. எனவே, மீதமுள்ள ஆயுட்காலம் ~19.5 பில்லியன் ஆண்டுகள் மட்டும் இருக்கிறது.. இந்தக் கணக்கின்படி பார்த்தால், நமது பிரபஞ்சம் தனது ஒட்டுமொத்த ஆயுளில் 41 சதவீதத்தைக் கடந்துவிட்டது. அதாவது, மனிதனின் சராசரி ஆயுளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நமது பிரபஞ்சத்திற்கு இப்போதைய வயது 30களில் உள்ளது.

    Advertisement

    இதுவரை விஞ்ஞானிகள் என்ன நம்பிக் கொண்டிருந்தார்கள் என்றால், 'டார்க் எனர்ஜி' (Dark Energy) என்ற மர்மமான விண்வெளி விசை, பிரபஞ்சத்தை எப்போதும் விரிவடையச் செய்துகொண்டே இருக்கும்.. அதனால் பிரபஞ்சத்திற்கு அழிவே இல்லை என்பதுதான் அது. ஆனால், சுமார் 47 மில்லியன் கேலக்ஸிக்களை ஆராய்ந்த 'டார்க் எனர்ஜி சர்வே இன்ஸ்ட்ருமென்ட்' கொடுத்த புதிய டேட்டா அந்த விதியை மாற்றியுள்ளன. டார்க் எனர்ஜி என்பது நிலையானது அல்ல, அது காலப்போக்கில் மாறக்கூடியது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    எப்படி அழியும்

    இதன் விளைவாக, பிரபஞ்சம் விரிவடைவது ஒரு கட்டத்தில் நின்று, அது அப்படியே தலைகீழாக மாறித் தன்னை தானே உள்நோக்கி இழுக்கத் தொடங்கும். பெருவெடிப்புக்கு முன்பு பிரபஞ்சம் எப்படி ஒரே ஒரு புள்ளியில் சுருங்கி இருந்ததோ, அதேபோல மீண்டும் சுருங்கும். இந்த நிகழ்வுதான் 'பிக் கிரஞ்ச்' (Big Crunch) என்று அழைக்கப்படுகிறது.

    Advertisement

    பிரபஞ்சம் உள்நோக்கிச் சுருங்கும்போது, விண்வெளியில் உள்ள அத்தனை கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் மற்றும் பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும் மிகக் கொடூரமாக ஒன்றுடன் ஒன்று அழுத்தப்படும். டாக்டர் ஹோங் நஹான் லுயூ இதுபற்றிக் கூறும்போது, "பிரபஞ்சம் சுருங்கச் சுருங்க, விண்வெளியில் உள்ளப் பொருட்கள் அனைத்தும் ஒன்றாகத் தள்ளப்பட்டு ராட்சத பிளாக் ஹோல்களை உருவாக்கும். இறுதியில் ஒட்டுமொத்த பிரபஞ்சமே இந்தக் பிளாக் ஹோலில் மூழ்கி, அதன் மையப் புள்ளிக்குள் மறைந்துவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்" எனத் தெரிவித்துள்ளார்.

    கவலை வேண்டாம்!

    அதேநேரம் இது தொடர்பாக நாம் இப்போதே கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இந்த சம்பவங்கள் எல்லாம் நடக்க இன்னும் 19.5 பில்லியன் ஆண்டுகள் இருக்கிறது. அதுமட்டுமன்றி, இன்னும் 4 முதல் 10 பில்லியன் ஆண்டுகளுக்குள் நமது பால்வெளி மண்டலமும் (Milky Way), அதன் அண்டை கேலக்ஸியான ஆண்ட்ரோமடாவும் மோதிக்கொள்ளும் சூழல் இருப்பதால், அதற்கு முன்பே பூமியின் கட்டமைப்பு மாறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இருப்பினும், இந்தத் டேட்டா அனைத்தும் முதன்முறையாகச் சேகரிக்கப்பட்டுள்ளதால், இதை முழுமையாக உறுதிப்படுத்த ஆய்வாளர்களுக்கு இன்னும் கூடுதல் காலம் தேவைப்படுகின்றன. இவர்களின் இந்த கண்டுபிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கைகள் அடுத்த ஆண்டுதான் வெளியாகவுள்ளன.

    English Summary

    A new study by the Donostia International Physics Centre reveals the universe has only 19.5 billion years left(இந்த பிரபஞ்சத்தின் ஆயுட்காலம் குறைவாக உள்ளதாக தகவல்): Universe Lifespan latest news in tamil.