தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், போர் நிறுத்தம் தொடர அமெரிக்கா ஐந்து கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. போர்க்களத்தில் சாதிக்க முடியாததை, சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அமெரிக்கா பறிக்கப் பார்க்கிறது என்று ஈரான் ஊடகங்கள் கொதித்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதன் பின், ஏப்ரல் 8ம் தேதி தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டது. ஆனால், நிரந்தரப் போர் நிறுத்தத்தில் உடன்பாடு எட்டப்படாமலேயே இருக்கிறது.
இதற்கிடையே இப்போது நிரந்தர அமைதிக்காக அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஈரானை அதிரவைத்துள்ளன. ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகள்: அதேநேரம் அமெரிக்காவின் இந்த நிபந்தனைகளை ஒருதலைப்பட்சமாக இருப்பதாகச் சொல்லி நிராகரித்துள்ள ஈரான், பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமெனில் தங்களின் 5 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஈரானின் நிபந்தனைகள் இருப்பினும், ஈரானின் இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. இதுவே சிக்கல் தொடர காரணம். ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்காவின் இந்த நகர்வுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இது அவர்களின் வழக்கமான தந்திரம்.. முதலில் ஒரு நெருக்கடியையும் போரையும் உருவாக்குவார்கள், பின்னர் அமைதியை மீட்டெடுக்கிறோம் என்ற போர்வையில் ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்துவார்கள். சுடுகாட்டை உருவாக்கிவிட்டு அதற்குப் பெயர் 'அமைதி' என்பார்கள். தங்களின் ராணுவ தோல்வியை மறைக்கவே அமெரிக்கா இதைச் செய்கிறது" என்று சாடினார். மேலும், ஈரானின் அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், "அமெரிக்கா எங்கள் திட்டத்தை ஏற்காவிட்டால், அதற்கான விலையை அமெரிக்க மக்கள் கொடுக்க வேண்டியிருக்கும்" என்றார். அதேபோல ஈரான் ராணுவமும், "எங்களின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால்.. இன்னும் கடுமையான மற்றும் நசுக்கக்கூடிய அடிகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளது. மத்தியக் கிழக்கில் அமைதி திரும்புமா என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வளைகுடாவில் அமைதி திரும்பினால் மட்டுமே கச்சா எண்ணெய் விலை குறைந்து, சர்வதேச நெருக்கடியைக் குறைக்கும்!அமெரிக்காவின் நிபந்தனைகள்
ஈரான்
சுடுகாட்டை உருவாக்குகிறார்கள்
டிரம்ப்