சைலெண்டாக வேலை பார்த்த ஈரான்.. சீனா - ரஷ்யா செய்த உதவி.. மீண்டும் தாக்குதல் நடத்த அஞ்சும் அமெரிக்கா!

  • வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திடீர் தாக்குதல் நடத்த அமெரிக்காவில் விரிவான திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதேவேளையில், ஈரான் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் தனது ராணுவ உற்பத்தி தொழிற்சாலைகளின் உற்பத்தி பணிகளை துவங்கியிருப்பதாகவும், தற்போது தாக்குதல் நடத்தினால் அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் டிரம்ப்-க்கு தகவல் தெரிவித்துள்ளன.

    Advertisement

    ஈரான் தற்காலிக போர் நிறுத்த காலம் துவங்கிய நாளில் இருந்து தனது ட்ரோன் உற்பத்தி தளத்தை முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி வேகத்தை அதிகரித்துள்ளது. மேலும், ஈரானின் ஏவுகணை ஏவும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கு இப்போது செயல்பாட்டில் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    இந்த நிலையில் அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் தற்போது, "ஈரான் எங்களுடைய எதிர்பார்ப்புகளை விட மிக வேகமாக தனது ராணுவ உற்பத்தியை மீண்டு வருகிறது" என அதிர்ச்சி அடைந்துள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன் பாகங்கள் அளித்து முக்கிய உதவிகளை வழங்கி வருவதாகவும் CNN தெரிவித்துள்ளது.

    ஈரான் தரப்பில் கடந்த வாரமே கடந்த போரில் பல பாடங்களை கற்றதாகவும், அமெரிக்காவின் 42 விமானங்களை சுட்டு வீழ்த்தியது மூலம் எப்படி தாக்க வேண்டும் என அனுபவம் பெற்றதாகவும் தெரிவித்தது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் படைக்களுக்கு பல சர்ப்ரைஸ் உள்ளது என தெரிவித்தது.

    Advertisement

    இதேவேளையில் ஈரான் நாடு முழுவதும் புதிய நகரக்கூடிய (mobile) ஏவுகணை ஏவும் தளங்களை இடமாற்றம் செய்து தாக்குதலுக்கு எதுவாக வைத்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட கடற்படை ஏவுகணைகளை பெருமளவு அமைந்துள்ளது. சுமார் 33 தளங்களில் 30 தளங்கள் தற்போது ஆக்டிவ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரான் தனது ராணுவ தயாரிப்புகளை வேகப்படுத்தியுள்ள இந்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் தரப்பில் திடீர் தாக்குதல் திட்டம் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அடுத்த தாக்குதலிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

    Advertisement

    மேலும் அடுத்த போர் தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது, காரணம் அடித்த தாக்குதல் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் கலந்துக்கொள்ளும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    இந்தப் பதற்றம் தொடருமானால், எண்ணெய் விலை மேலும் உயர்வு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    English Summary

    Iran is rapidly rebuilding its drone and missile capabilities during the ceasefire, exceeding US expectations with help from Russia and China. As America and Israel prepare for a potential surprise strike, tensions in the Middle East have escalated sharply with global oil prices also rising. ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் திடீர் தாக்குதல் திட்டமிடும் நிலையில், ஈரான் தனது ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தியை எதிர்பார்த்ததை விட வேகமாக மீட்டெடுத்து வருகிறது.