ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army!

  • மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான ராணுவப் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க ஆயுதப் படைகளின் மத்திய அமைப்பு (US Central Command - CENTCOM) ஈரானின் முக்கிய ராணுவத் தளங்கள் மீது அதிரடியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    Advertisement

    ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள கோருக் (Goruk) நகரம் மற்றும் புகழ்பெற்ற கெஷ்ம் தீவு (Qeshm Island) ஆகிய பகுதிகளில் உள்ள ஈரானிய ரேடார் நிலையங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன் தளங்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது.

    Advertisement

    சர்வதேசக் கடல் வழித்தடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்தத் தற்காப்புத் தாக்குதல் (Self-defense strikes) நடத்தப்பட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு தான் ஈரான் குவைத்தில் இருக்கும் அமெரிக்க தளத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது

    தாக்குதலுக்கான பின்னணி

    அமெரிக்க சென்டரல் கமெண்ட் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இந்தத் தாக்குதல் குறித்த முக்கியப் பின்னணியை வெளியிட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லை வான்வெளியில் (International waters) பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் 'எம்கியூ1' (MQ1) ரக அதிநவீன ஆளில்லா உளவு ட்ரோன் ஒன்றை ஈரான் அண்மையில் சுட்டு வீழ்த்தியது.

    Advertisement

    ஈரானின் இந்த அத்துமீறிய செயல் மற்றும் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, அமெரிக்கப் படைகள் இந்த அதிரடி வான்வழித் தாக்குதலைத் தற்பொழுது நடத்தியுள்ளதாக அமெரிக்க தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

    ஈரானின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகள்

    அமெரிக்காவின் இந்த அதிரடி வான்வழித் தாக்குதலின் மூலம், ஈரான் எல்லையை ஓட்டிய கடல் பகுதியில் பயணிக்கும் சர்வதேச வணிகக் கப்பல்கள் மற்றும் பிற நாடுகளின் கப்பல்களுக்குத் நேரடி அச்சுறுத்தலாக (Clear threats) விளங்கிய ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானுக்கு இந்த போரில் முதுகெலும்பாக விளங்குவது டிரோன்கள் தான்.

    Advertisement

    அமெரிக்கப் படைகளின் துல்லியமான குண்டுவீச்சின் மூலம் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Iranian air defenses), ட்ரோன்களைக் கட்டுப்படுத்தும் ஒரு தரைக்கட்டுப்பாட்டு நிலையம் (Ground control station) மற்றும் தாக்குதலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு 'ஒன்-வே அட்டாக்' (One-way attack) ரக தற்கொலைப்படை ட்ரோன்கள் ஆகியவை முழுமையாகத் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    கச்சா எண்ணெய் விலை

    மத்திய கிழக்கின் கோருக் நகர் மற்றும் கெஷ்ம் தீவில் அமெரிக்காவும் ஈரானும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இந்த ராணுவ நடவடிக்கை, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் ஒரு பேரல் 114.48 டாலராக இருந்தது, மே மாதத்தில் இது 106.83 டாலராக குறைந்துள்ளது என மத்திய அரசின் தரவுகள் காட்டுகிறது. கடைசியாக மே 28ஆம் தேதி வாங்கிய கச்சா எண்ணெய்யின் ஒரு பேரல் விலை 97.52 டாலர்.

    இந்த தாக்குதல் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் எகிறக்கூடும். இன்று சிலிண்டர் விலை மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. கடைசியாக மே 25ஆம் தேதி லிட்டருக்கு 2.50 ரூபாய் அதிகரித்தது.

    Advertisement

    எரிபொருள் விலை உயர்வு மூலம் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பதால், வளைகுடா பகுதியில் நிலவும் இந்த பதற்றமான சூழல் சர்வதேச அளவில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

    English Summary

    The US Central Command (CENTCOM) conducted self-defense strikes on Iranian radar and drone facilities in Goruk city and Qeshm Island, targeting air defenses and attack drones that threatened regional shipping. This escalation follows Iran’s downing of a US MQ1 drone in international waters, further intensifying tensions in the Middle East.