அலறும் ஈரான்.. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி

  • டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைத்துள்ளது. ஆனால் திடீரென்று இந்தியா, சீனா, கத்தார் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று வரலாம் என்று ஈரான் அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணியில் மருந்து - மாத்திரைகள், பணபலம், அரசியல் ரீதியான சப்போர்ட் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் உள்ளதாகவும், இதனை மனதில் வைத்தே ஈரான் 4 நாடுகளுக்கும் அனுமதி வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா போர் புரிந்தன. தற்போதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளார். இந்தியா உள்பட எந்த நாடுகளின் கப்பல்களுக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதியில்லை என ஈரான் அறிவித்தது.

    Advertisement

    இதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சில கப்பல்கள் ஈரானின் கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தற்போது வரை இந்தியாவை சேர்ந்த 20 மாலுமிகள் பலியாகி உள்ளனர்.

    இப்படியான சூழலில் தான் திடீரென்று ஈரான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா, சீனா, கத்தார், ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக பயணித்து வருகின்றன. இந்த நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என அறிவித்துள்ளது. இதனை ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை கமிட்டியின் துணை தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் உறுதி செய்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் திடீரென்று ஈரான் மனம்மாறியது எப்படி? அது ஏன் மற்ற நாடுகளை விட்டுவிட்டு இந்தியா, சீனா, கத்தார், ஈராக் உள்ளிட்ட 4 நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி வழங்க வேண்டும் என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஈரானில் தற்போது அத்தியாவசிய மருந்துகளுக்கு தேவை அதிகம் உள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடைகளால் மாத்திரை, மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடியாத நிலை உள்ளது. இந்தியாவை எடுத்து கொண்டால் ஏராளமான மாத்திரை, மருந்துகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இங்கிருந்து மாத்திரை, மருந்துகள் பிற வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரானுக்கும், நம் நாட்டுக்கம் இடைய நல்ல நட்பு உள்ளது. இதனால் நம் நாட்டின் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்தால் நம்மிடம் இருந்து மாத்திரை, மருந்துகளை பெற முடியும் என கணக்கிட்டு ஈரான் இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    அதேபோல் ஈரான் - சீனா இடையேயும் நல்ல நட்பு உள்ளது. இருநாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் எரிசக்தி சார்ந்த ஏற்றுமதிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் சீனாவிற்கு தான் செல்கிறது. ஈரான் மீதான பொருளாதார தடைகளை தாண்டி சீனா, ஈரானுடன் நட்பு பாராட்டி கச்சா எண்ணெய் வாங்கியது. இது ஈரானின் பொருளாதாரத்துக்கு வலு சேர்த்தது. ஆனால் சமீபத்திய மோதலில் இந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த வர்த்தகத்தை மீண்டும் தொடங்கவும், அரசியல் ரீதியாக ஆதரவு பெறவும் சீனாவிற்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும் ஈரான் - கத்தார் இடையே நல்ல நட்பு உள்ளது. சமீபத்திய மோதலில் கத்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் கூட வரலாற்று ரீதியாக இருநாடுகளும் பல்வேறு விஷயங்களில் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் பணிகளில் கத்தார் ஈடுபட்டு வருகிறது. இதனால் கத்தார் நாட்டின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ஈராக் - ஈரான் இடையேயான இணக்கமான உறவு உள்ளது. அவ்வப்போது மோதிக்கொண்டாலும் கூட ஈராக்கும், ஈரானும் ஷியா இஸ்லாமிய நாடாக உள்ளன. இது இருநாடுகளை இணக்கமாக வைக்கிறது. மேலும் ஈராக்கில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கு ஈரான் உதவி வருகிறது. பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஈராக் கப்பலையும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Due to war tensions with the United States and Israel, Iran had closed the Strait of Hormuz. However, Iran has now unexpectedly announced that ships from India, China, Qatar, and Iraq are permitted to transit through the Strait. Reports suggest that this decision is driven by key factors-including the provision of medicines, financial resources, and political support-which prompted Iran to grant access to these four nations.