சவுதி அரேபியாவை இனி சும்மா விடமாட்டோம்.. மிரட்டிய ஏமன் ஹவுதிகள்.. புதிய பிரச்சனை

  • சனா: ''சவுதி அரேபியா ஏமன் வான்வெளி பரப்புக்குள் நுழைந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மட்டுமின்றி அந்த நாட்டின் நிலம் மற்றும் கடலில் உள்ள பிற சொத்துகளை குறிவைத்து தாக்குவோம்'' என்று ஏமனின் ஹவுதிகள் கடும் வார்னிங் விடுத்துள்ளனர்.

    Advertisement

    ஏமன் நாட்டில் ஹவுதி எனும் கிளர்ச்சி படையினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நடத்திய போரால் ஈரானில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான சிகிச்சை உள்பட பிற உதவிகளை ஏமன் ஹவுதிகள் வழங்கி வருகின்றனர்.

    Advertisement

    அந்த வகையில் நம்நாட்டின் நேரப்படி இன்று காலை 5.20 மணிக்கு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் விமானம் சென்றது. இந்த விமானத்தில் போரால் காயம் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று 200 பேர் வரை இருந்தனர். இந்த விமானம் சனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

    இந்த சமயத்தில் சவுதி அரேபியாவின் போர் விமானங்கள் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளி பரப்புக்குள் நுழைந்து ஈரான் விமானத்தை தடுக்க முயன்றது. இந்த முயற்சியை ஹவுதிகள் முறியடித்தனர். இந்நிலையில் தான் தற்போது சவுதி அரேபியாவிற்கு ஹவுதிகள் கடும் வார்னிங் கொடுத்துள்ளனர். இதுபற்றி ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் யாக்யா சாரி கூறியதாவது:

    Advertisement

    ''எதிரி சவுதி அரேபியாவை நாங்கள் வார்னிங் செய்கிறோம். எங்களின் வான்வெளி பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் உரிய முறையில் பதிலடி கொடக்கப்படும். சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மட்டுமின்றி நிலம் மற்றும் கடலில் உள்ள அந்த நாட்டிற்கு சொந்தமான சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம்.

    ஈரானில் இருந்து வந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. தடையை ஏற்படுத்த முயன்ற சவுதி அரேபியாவின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. தரையிறங்கிய விமானம் மீண்டும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் நோக்கி சென்றுள்ளது.

    ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்ற எங்கள் நாட்டின் பிரநிதிநிதிகளை அந்த விமானம் மீண்டும் அழைத்து வர உள்ளது. எத்தகைய சூழலையும் கையாள ஹவுதி போர்வீரர்கள் தயாராக உள்ளனர். சவுதி அரேபியாவின் முற்றுகையை முறியடிக்கும் வகையில் எங்கள் வீரர்களின் விரல்கள் துப்பாக்கியின் Trigger-யில் தயாராக உள்ளது. '' என்று வார்னிங் செய்துள்ளார்.

    English Summary

    "Yemen's Houthis have issued a stern warning, stating, 'If Saudi Arabia enters Yemeni airspace, it will face dire consequences. We will target not only Saudi airports but also other assets on land and at sea.'"