தண்டலம் பொறியியல் கல்லூரியின் 5 ஆவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலையால் சோகம

  • காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 5-வது மாடியில் இருந்து குதித்து 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பூந்தமல்லியைச் சேர்ந்த ஷெரின் (19), தனியார் கல்லூரியில் ஏ.ஐ.எம்.எல். இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது தந்தை சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், தாயார் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஷெரின், ஆண் நண்பர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இது தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, தாயார் ஷெரினை கடிந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷெரின், கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் உடலை பார்த்து அவரது தாயும் உறவினர்களும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A 19 years old girl died after she had fallen from 5th floor of a private college in Thandalam near Sriperumbudur.