MDMK Vs TVK : செங்கோட்டையனின் தரம் அப்படித்தான் இருக்கும்! அவரை எல்லாம் மதிப்பதே இல்லை! மதிமுக

  • காஞ்சிபுரம்: "அமைச்சர் செங்கோட்டையனின் தரம் அப்படித்தான் இருக்கும்; அவரை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை" என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் சு.ஜிவன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியார் விடுதியில் மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மதிமுக ஆக்கப் பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

    Advertisement

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், "மதிமுக கட்சியைப் போல அதிமுக கட்சியும் ஆகிவிடும். இன்னும் சில நாட்களில் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள்; தொண்டர்கள் இருக்கமாட்டார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளாரே?" என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சு.ஜிவன், "உண்மையை சொன்னால் கொஞ்சம் கசக்கும். ஆனால் நான் உண்மையைத்தான் பேசுவேன். தவெக தொடங்கும்போது செங்கோட்டையன் தவெகவில் இல்லை. நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இல்லை.

    அவர்கள் வேறு இடங்களில் குடும்பம் நடத்திவிட்டு, இங்கு வாடகை வீட்டுக்கு வந்தவர்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அவர்களின் தரம் அப்படித்தான் இருக்கும். நாளைக்கு தவெகவின் நிலையில் சறுக்கல் ஏற்பட்டால், இன்னொரு இடத்திற்கு வாடகைக்கு செல்வார்கள்.

    Advertisement

    அதனால் அவர்களைப் பற்றி பெரிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இன்னும் சில நாட்களில் மதிமுகவை போல அதிமுக ஆகிவிடும். மதிமுகவில் தலைவர்கள் மட்டும்தான் உள்ளனர். அது போல் அதிமுக நிலைமையும் விரைவில் அப்படியாகிவிடும் என விமர்சித்திருந்தார்.

    இதுகுறித்து துரை வைகோ கூறியிருப்பதாவது: செங்கோட்டையன் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டது. அவர் நாதவறிப் பேசியிருக்கலாம். வைகோ மீது மிகுந்த மரியாதை கொண்டவர் செங்கோட்டையன் என்று துரை வைகோ தெரிவித்திருந்தார்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தவெகவுக்கு சென்றுவிட்டன. அந்த வகையில் கடைசியாக மதிமுகவும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் செங்கோட்டையன் மதிமுகவை விமர்சித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    MDMK Deputy General Secertary Jeevan criticises about Sengottaiyan and says that his quality will be like that only.