கன்னியாகுமரி இன்ஸ்டா பிரபலம் மதுமிதா வீட்டில் 118 நகை திருட்டு! கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

  • குமரி: யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை குமரி முதல் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் வரை 160 சிசிடிவி கேமிராக்களை அடுத்தடுத்து ஆய்வு செய்து பிடித்துள்ளதாக குமரி மாவட்ட எஸ்பி அன்ஷுல் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து இதுவரை 98 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொள்ளை நடந்த 3 நாட்களில் கொள்ளையர்களை போலீசார் தூக்கியது எப்படி என்பது குறித்து குமரி மாவட்ட எஸ்பி அன்ஷுல் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

    கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவில் குமரி ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஒரு போன் கால் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் நாலாபுறமும் ஆய்வு செய்ததில் வீட்டின் பக்கவாட்டில் உள்ள சைடு டோரை கட் செய்து உள்ளே சென்று இருக்கிறார்கள். பின்னர் வீட்டின் கிரவுண்ட் ப்ளோருக்கு சென்று அங்குள்ள இரண்டு ரூமில் திருடி இருக்கிறார்கள்.

    பின்னர் முதல் தளத்தில் உள்ள ரூமுக்கு சென்று அங்கு பீரோக்களை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து இருக்கிறார்கள். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமிராக்கள், பக்கத்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தோம். அப்போது இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை 3 பைக்குகள் மட்டும் அப்பகுதியில் இருந்து கிளம்பியுள்ளன. இதில் ஒவ்வொன்றாக ஆய்வு செய்ததில் ஒரு பைக் மட்டும் நாங்க சந்தேகப்பட்டோம்.

    Advertisement

    160 கேமிராக்கள் ஆய்வு

    அந்த பைக் அடுத்து எங்கே போயிருக்கு என அடுத்தடுத்த கேமிராக்களில் ஆய்வு செய்தோம். அப்படியே அந்த பைக் எங்கே போகுது என தொடர்ந்து தூத்துக்குடி வரை உள்ள சிசிடிவி கேமிராக்களில் ஆய்வு செய்தோம். மொத்தம் 160 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் அருகே எறும்புக்காடு பகுதியில் அவர்கள் பைக் இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் ஆய்வு செய்த போது அதே அடையாள பைக்கில் வந்த இசக்கி பாண்டி மற்றும் முருகன் ஆகிய இருவர் சிக்கினர்.

    அவர்களை விசாரித்த போது 5 சவரன் நகைகள் வைத்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் இருவரை கைது செய்தோம். இசக்கி பாண்டிதான் இதற்கு மெயின். விசாரணையில் யூடியூப் வீடியோக்களை அவர்கள் பார்த்து வந்தது தெரியவந்தது. எந்த ரூமில் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் கடந்த 6 மாதங்களாக பார்த்து வந்துள்ளனர். இதையடுத்து இந்த கொள்ளையை அரங்கேறியுள்ளனர்" என்று கூறினார்.

    Advertisement

    நடந்தது என்ன?

    கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விஐபி கார்டனில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரின் மகன் வினோத் குமார். ஏலக்காய் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது மனைவி யூடியூபர் மதுமிதா. மதுமிதா யூடியூப் சேனலில் தன் நகைகள் மற்றும் பணத்துடன் இருப்பது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்.

    அடிக்கடி தன்னிடம் இருக்கும் குவியல் குவியலான பணக் கட்டுகளையும் தங்க நகைகளையும் அணிந்தபடி ரீல்ஸ் வீடியோக்கள் போடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 24.09.2026 ஆம் தேதி இருவரும் மாலை 6 மணி அளவில் திருநெல்வேலிக்கு சென்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு மாடியில் உள்ள அறையில் சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது.

    Advertisement

    4 பேர் கைது

    உடனே இது சம்பந்தமாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்படி ராஜாக்கமங்கலம் போலீசார், 243/26 U/S 331(3),331(4),305(a) BNS சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் IPS உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மதுமிதாவின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம் வரை 160 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 35 CDR ஆய்வு செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் இசக்கி பாண்டி (30), மற்றும் முக்கூடல் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் முருகன் (28) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய சென்ற போது இருவரும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இந்நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த தனிப்படை போலீசார் எறும்புக்காடு-ல் வாகன சோதனை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முப்பிடாதி என்பவரின் மகன் முருகேசன் (30) மற்றும் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் தங்கப்பாண்டி (39) ஆகியோரும் கைது செய்யபப்ட்டனர். மொத்தமாக அவர்களிடம் இருந்து 98 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    English Summary

    Kumari: Kanyakumari District SP Anshul stated that the thieves who stole 118 sovereigns of gold jewelry from YouTuber Madhumitha's home were apprehended after a sequential analysis of 160 CCTV cameras spanning the route from Kumari to Srivaikuntam in Thoothukudi.