சிறுவர்களுக்கு பிடித்தால் போதும்.. ஸ்பெயின் vs விஜய்யின் தவெக.. கேரளாவே திகைக்கும் ஒற்றை வீடியோ

  • கன்னியாகுமரி: கேரளாவில் நேற்று அர்ஜெண்டினாவிற்கே வெற்றி என்று கொடியை சுற்றிக்கொண்டு திரிந்தார்கள்.. மோகன்லால் எல்லாம் நேரடியாக போட்டி நடந்த மைதானத்திற்கே சென்று அர்ஜெண்டினாவின் வெற்றியை பார்க்க ஆர்வமாக இருந்தார். ஆனால் கேராளவில் இரண்டு சிறுவர்கள் மட்டும் ஸ்பெயின் கொடியை ஆட்டிய படம் வைரலானது.. கடைசியில் ஸ்பெயின் தான் கோப்பையை வென்றது. இது தான் தமிழ்நாட்டிலும் நடந்திருக்கிறது. சிறுவர்கள் விரும்பிய விஜய்யின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று தவெகவினர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். தவெக கொடியும், ஸ்பெயின் கொடியும் ஒரே கலரில் இருந்ததால் தளபதியின் ஆசி பெற்ற அணி என்று ஸ்பெயினின் வெற்றியை தவெகவினர் கொண்டாடுகிறார்கள்.

    Advertisement

    உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடந்தது. இதில் ஸ்பெயின் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றுள்ளது.இந்த செய்தியை கேள்விப்பட்ட ஏழு வயதே ஆன பக்கத்து வீட்டு பையன் உற்சாகம் அடைந்தான்.அந்த சிறுவன் மட்டுமல்ல, பக்கத்து வீடுகளில் வசிக்கும் பல சிறுவர்களுக்கு மெஸ்ஸியை பிடிக்காது, ரொனால்டோவை தான் பிடிக்கும் என்றார்கள்.\

    Advertisement

    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் சொல்லிய காரணம், அதனைவிட விட வியப்பாகவும் இருந்தது. ஏனெனில் குழந்தைகள் யாராவது வந்து நின்றால், அவர்களை மெஸ்ஸி உதாசினப்படுத்துவாராம், கடந்த போய்விடுவார் என்று குமுறினார்கள். என்னடா சொல்றீங்க என்று தேடி பார்த்தால், குழந்தைகள் சிலரை மெஸ்ஸி கண்டு கொள்ளாமல் போவது, ரொனால்டோ குழந்தைகளை கொஞ்சுவதும் தெரிந்தது. இதனால் தான் மெஸ்ஸி பிடிக்கவில்லை என்று குழந்தைகள் கூறுகின்றன என்று முடிவுக்கே வர வேண்டியதாக இருந்தது.

    இப்போது விஷயத்திற்கு வருவோம். மொத்த இந்தியாவும் கிரிக்கெட்டை கொண்டாடும் போது, கேரளாவும், கொல்கத்தாவும் விதிவிலக்காக கால்பந்தை கொண்டாடும். இதில் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் கால்பந்து தான் உயிர் என்பது போல் இருக்கும். பலரும் கிரிக்கெட் போல் ஆர்வமாக பார்ப்பது, விளையாடு கால்பந்து தான். அப்படி இருக்கும் போது, உலக கோப்பை கால்பந்து போட்டி தொடர் கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்தது. இதில் ஆரம்பம் முதலே அர்ஜெண்டினாவிற்கே கேரளாவின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

    Advertisement

    கேரளாவில் இருந்து போய் அர்ஜெண்டினாவில் வீரர்கள் விளையாடுவது போல் பலர் கொண்டாடினார்கள். மொத்த கேரளாவுமே அர்ஜெண்டினாவிற்கே ஆதரவு தெரிவித்தது. போட்டி தொடர்பான விவாதங்கள், பேச்சுக்கள் எல்லாமே குக்கிராமத்தில் டீக்கடைகள் வரை பேமஸ்.. எல்லாருமே அர்ஜெண்டினா எப்படியும் ஜெயிக்கும் என்று நேற்று கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்தது. இதற்காக கேரளாவிற்கு இன்று பொது விடுமுறையே விடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை போட்டியை பார்த்துவிட்டு, இன்று காலையில் தூங்கட்டும் என்று அரசாங்கமே விடுமுறை அறிவித்து இருந்தது.

    கேரளாவில் பலர் கடந்த ஒரு வாரமாகவே அர்ஜெண்டினாவிற்கே அந்நாட்டு கொடியுடன் பைக்கில் ஊர்வலம் போவது , பேரணி செல்வது நடக்கிறது. அப்படி மொத்த ஊரும் ஒரு கிராமத்தில் பேரணியாக பைக்கில் அர்ஜெண்டினா கொடியுடன் ஊர்வலம் சென்றார்கள். அங்கு இரண்டு சிறுவர்கள் மட்டும் தவெக கொடியை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். இது தற்போது வைரலாகி வருகிறது.

    Advertisement

    கடைசியில் சிறுவர்களுக்கு பிடித்த ஸ்பெயின் தான் கோப்பையை வென்றது. இது தான் தமிழ்நாட்டிலும் நடந்திருக்கிறது. சிறுவர்கள் விரும்பிய விஜய்யின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று தவெகவினர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். தவெக கொடியும், ஸ்பெயின் கொடியும் ஒரே கலரில் இருந்ததால் தளபதியின் ஆசி பெற்ற அணி என்று ஸ்பெயினின் வெற்றியை தவெகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

    English Summary

    As long as children like it, that’s enough; a video from Kerala serves as a lesson regarding the comparison between Spain and Vijay’s TVK.