நாகர்கோவிலில் ஹெல்மெட் போடாமல் போனால்.. வீடு தேடி வரப்போகும் அபராதம்.. வந்தது ஏஐ கேமரா

  • கன்னியாகுமரி: ஹெல்மெட் அணியாமல் செல்வர்களை பிடிக்க போலீசார் சென்னை போன்ற பெருநகரங்களில் தனியாங்கி கேமரா வைத்துள்ளார்கள். அதில் விதிமீறல்களை கண்டுபிடித்தால், அபராதம் விதிப்பார்கள். அப்படியான சிஸ்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக சந்திப்பில் இது நடைமுறைக்கு வகிறது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்கிறவர்களுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் முறையை கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் திடீரென தவறி விழுந்தால், அவர் வாழ்க்கையே முடிந்து போக அதிக அபாயங்கள் உள்ளது. ஏனெனில் 40 கிமீ வேகத்தில் போய் விழுந்தாலும் பிழைப்பது கடினம். வெறும் 20 கிமீ வேகத்தில் போனவர்கள் கூட பிழைக்காமல் போன சம்பவங்கள் நடந்துள்ளன.இதற்கு காரணம் தலையில் அடிப்படுவது தான். தலையில் அடிபடவில்லை என்றால், 90 சதவீதம் பிழைக்க வாய்ப்பு உள்ளது. அதற்காகவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு தருவது இல்லை.

    Advertisement

    இரண்டாவது காரணம்.. போலீசாருமே தினசரி கடுமையான நடவடிக்கை ஹெல்மெட் விவகாரத்தில் எடுப்பது இல்லை. சென்னையில் எல்லாம் ஹெல்மெட் போடாமல் பக்கத்து தெருவை கூட தாண்ட முடியாது. ஆனால் மற்ற ஊர்களில் ஹெல்மெட் போடாமல் சாதாரணமாக சென்றுவர முடியும் என்பதே எதார்த்தம். போலீசார் சோதனை செய்யும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் ஹெல்மெட் போட்டு செல்பவர்கள் மிக குறைவு. இப்படியான சூழலே விபத்திற்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழலில் தான் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்கிறவர்களுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் முறையை கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்

    Advertisement

    விபத்தில்லா குமரி என்ற இலக்கை முன்னிறுத்தி சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நவீன தொழில்நுட்பத் திட்டங்களை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானாவில் போக்குவரத்து விதிமீறலை கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் செயல்படும் தானியங்கி கேமராக்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

    இதன்படி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சந்திப்பில், சாலைகளின் நான்கு திசைகளிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே கண்டறியும் திறன் கொண்டவையாகும்.

    Advertisement

    விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்கள் கலெக்டர் அலுவலக சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும். மேலும் விதிமீறலின் தன்மைக்கேற்ப அபராத நடவடிக்கைகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, இந்த திட்டம் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இணைந்து மேற்கொண்டுள்ள புதுமையான கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஏ.ஐ. திட்டத்தை வடிவமைத்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பாராட்டினார். இந்த முயற்சி மூலம் போக்குவரத்து விதிமீறல்களை குறைத்து, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பதுடன் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த உதவும் என நம்பிக்கை உருவாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட துணை சூப்பிரண்டு இளஞ்செழியன், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    English Summary

    Kanyakumari SP Stalin has inaugurated an automated system for imposing fines on two-wheeler riders in Nagercoil who do not wear helmets. Let us look at this in detail.