சுங்கச்சாவடியை சுற்றி 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கான ஆப்.. பலரும் அறியாத சூப்பர் திட்டம்

  • கன்னியாகுமரி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அடிக்கடி கடந்து செல்லும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு புதிய டிஜிட்டல் ஆப்பை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் மாதாந்திர உள்ளூர் பாஸ்களை பெற சுங்கச்சாவடிக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ 'ராஜ்மார்க்யாத்ரா' என்ற ஆப் மூலமாக நேரடியாக விண்ணப்பித்து பெற முடியும். ஆனால் இதனை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

    Advertisement

    'ராஜ்மார்க்யாத்ரா' ஆப்பை பொறுத்தவரை ஆன்லைன் முறையிலேயே சான்றிதழ்களை பதிவேற்றி பாஸ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட சுங்கச்சாவடி வழியாக எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி பயணிக்க முடியும். பயன்பாட்டின்போது ஏற்படும் சுங்கச்சாவடி தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு பல மொழிகளில் சேவை வழங்கும் ஏ.ஐ. உதவி அம்சமும் இச்செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சுங்கச்சாவடி அருகே வாழும் உள்ளூர் மக்களின் நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தும் வகையில் இந்த புதிய டிஜிட்டல் நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு ஆகிவிட்ட போதிலும் மிகக் குறைவான நபர்களே இந்த 'ராஜ்மார்க்யாத்ரா' செயலியை பயன்படுத்தி பாஸ் பெற்று வருகிறார்கள்.

    ராஜ்மார்க்யாத்ரா ஆப் என்பத இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தொடங்கப்பட்ட மொபைல் ஆப் ஆகும். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களுக்காக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.குறிப்பாக இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர் மக்கள், சுங்கச்சாவடிக்கு நேரில் செல்லாமல் இந்த ஆப் மூலமாகவே சான்றிதழ்களைப் பதிவேற்றி மாதாந்திர பாஸ் பெற முடியும். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அந்த பாதையில் உள்ள சுங்கச்சாவடிகள், உணவகங்கள், பெட்ரோல் பங்க்குகள், மருத்துவமனைகள் மற்றும் இ-வாகன சார்ஜிங் மையங்களை மேம்ப்களை பார்க்க முடியும்.

    Advertisement

    அதேபோல் ராஜ்மார்க்யாத்ரா ஆப்பில் ஃபாஸ்டேக் கணக்கை இணைத்து ரீசார்ஜ் செய்ய முடியும். எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை சரிபார்க்க முடியும். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சாலைகளில் பள்ளம் அல்லது மோசமான சாலை என்றால் எளிதாக புகார் அளிக்கலாம். அதேபோலல் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதம் அல்லது பிற பிரச்சனைகள் குறித்துப் புகைப்பட ஆதாரங்களுடன் நேரடியாகப் புகார் பதிவு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். அதேபோல் விபத்து அல்லது வாகனப் பழுது போன்ற அவசரக் காலங்களில் உடனடி உதவி பெற 1033 என்ற தேசிய நெடுஞ்சாலை அவசர உதவி எண்களைத் தொடர்புகொள்ளும் வசதியும் இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 'Rajmargyatra' என்ற ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள்.

    English Summary

    App features for residents living within 20 km of toll plazas.. A fantastic Central Government scheme that many are unaware of.